• Apr 16 2026

திடீரென மூடப்பட்ட பிரதான வீதி...!வெளியான அறிவிப்பு...! மக்கள் கவலை...!samugammedia

Ziya / Dec 29th 2023, 2:36 pm
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பல்வேறு பகுதிகளிலுமுள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றது.

பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழைக் காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில்,  மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவ நிலையம்  அறிவித்துள்ளது.

அதேவேளை வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்புக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல புகையிரத நிலையத்தில் இருந்து மானம்பிட்டி நோக்கி விசேட புகையிரத சேவை இயக்கப்படவுள்ளதாக கதுருவெல நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.




திடீரென மூடப்பட்ட பிரதான வீதி.வெளியான அறிவிப்பு. மக்கள் கவலை.samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பல்வேறு பகுதிகளிலுமுள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றது.பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழைக் காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.இவ்வாறானதொரு நிலையில்,  மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவ நிலையம்  அறிவித்துள்ளது.அதேவேளை வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்புக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல புகையிரத நிலையத்தில் இருந்து மானம்பிட்டி நோக்கி விசேட புகையிரத சேவை இயக்கப்படவுள்ளதாக கதுருவெல நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement