• Nov 07 2025

தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுவது இல்லை - மக்கள் முறைப்பாடு!

shanuja / Oct 10th 2025, 10:52 pm
image

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கப்படுவது இல்லை எனவும் ஒரு சில பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து அதிக அளவு கட்டணம் அறவீடு செய்வதாகவும்  பயணிகள்  முறைப்பாடு செய்துள்ளனர். 


சாமி மலை மஸ்கெலியா, சாமி மலை ஹட்டன், மஸ்கெலியா ஹட்டன், மஸ்கெலியா மறே, மஸ்கெலியா நல்லதண்ணி, மஸ்கெலியா ஹப்புகஸ்த்தனை, மஸ்கெலியா காட் மோர் ஆகிய சாலையில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கப்படுவது இல்லை என முறைப்பாடு வழங்கியுள்ளனர். 


அத்துடன் மஸ்கெலியா பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் தனியார் பேருந்து சேவைகள் மஸ்கெலியா நகரில் ஐந்து இடங்களில் தரித்து நின்று சுமார் ஒரு மணி நேரம் சீரழிவு செய்து ஆமை வேகத்தில் மஸ்கெலியா நகரை விட்டு வெளியே செல்கிறது. 


இது குறித்து மத்திய மாகாண போக்குவரத்து சபை அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி இனி வரும் காலங்களில் முறையான சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த நேரத்தில் பேருந்துகள் நகரை விட்டு வெளியே செல்ல வேண்டும் அரசாங்கம் கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்த பற்று சீட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுவது இல்லை - மக்கள் முறைப்பாடு மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கப்படுவது இல்லை எனவும் ஒரு சில பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து அதிக அளவு கட்டணம் அறவீடு செய்வதாகவும்  பயணிகள்  முறைப்பாடு செய்துள்ளனர். சாமி மலை மஸ்கெலியா, சாமி மலை ஹட்டன், மஸ்கெலியா ஹட்டன், மஸ்கெலியா மறே, மஸ்கெலியா நல்லதண்ணி, மஸ்கெலியா ஹப்புகஸ்த்தனை, மஸ்கெலியா காட் மோர் ஆகிய சாலையில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கப்படுவது இல்லை என முறைப்பாடு வழங்கியுள்ளனர். அத்துடன் மஸ்கெலியா பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் தனியார் பேருந்து சேவைகள் மஸ்கெலியா நகரில் ஐந்து இடங்களில் தரித்து நின்று சுமார் ஒரு மணி நேரம் சீரழிவு செய்து ஆமை வேகத்தில் மஸ்கெலியா நகரை விட்டு வெளியே செல்கிறது. இது குறித்து மத்திய மாகாண போக்குவரத்து சபை அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி இனி வரும் காலங்களில் முறையான சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த நேரத்தில் பேருந்துகள் நகரை விட்டு வெளியே செல்ல வேண்டும் அரசாங்கம் கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்த பற்று சீட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement