இலங்கையில் 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பட்டலந்த வதை முகாம் மாத்திரமல்ல நாடாளாவிய ரீதியல் பல வதைமுகாம்கள் காணப்பட்டதோடுஇ அவ்வாறான முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் வார்த்தைகளால் கூறமுடியாது அவை இரத்த சரித்திரம் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் 1983 ஆம் ஆண்டு வரை ஜே.வி.பி அமைதியான முறையிலும் ஜனநாயக ரீதியிலும் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்திருந்தது. இவ்வாறான நிலையிலேயே 1983 ஆம் ஆண்டு ஜே.வி.பி கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது இதற்கு காரணம் அப்போது இடம்பெற்ற ஜூலை இனக் கலவரம் எனவும் குறித்த கலவரமே இலங்கையின் அரசியல் வரலாற்றின் திருப்பு முனை எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே அப்போதைய அரசாங்கத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அழிக்க முற்றபட்டனர்.
அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியினர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினரிடமும் அரசாங்கத்திடமும், ஐ.நாவிடமும் கோரியிருந்தோம்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே அப்போதைய அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுக்கின்ற பல்வேறு உடன்படிக்கைகளை செய்து கொண்டது. இதனால் நாடு அழிவடைவதை பொறுத்துக்கொள்ள முடியாமால் தீவிர போராட்டத்தை அன்று ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார்.
எனவே பட்டலந்த வதை முகாமில் சித்திரவதை மேற்கொண்டவர்களை படுகொலை செய்தவர்களை தேடிக்கண்டு பிடித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் மலையகத்தில் பல்வேறு பிரதேசங்களில் பல கலவரங்களும் படுகொலைகளும் இடம்பெற்று இரத்த ஆறு ஓடியது. அதற்கு எப்போது நீதி கிடைக்கும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் அன்று அவ்வாறான மிக மோசமான செயல்களில் ஈடுபட்டவர்கள் வேறு யாருமல்ல ஐக்கிய தேசிய கட்சியினரே எனவும் பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் தற்போது அனைத்து குற்றச்செயல்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரே காரணம் என குற்றம் சுமத்துகின்றனர்.
அதுமட்டுமன்றி, 1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது அதன் பின்னணியில் ரணில் விக்ரமசிங்க இல்லையா? 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக் கலவரத்தின் போது அதன் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி இல்லையா? ஜே.ஆர்.ஜேவர்தன இல்லை? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதுமாத்திரமன்றி யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குழியில் கல்வி கற்ற கிருஷாந்தி என் மாணவி படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு நாடாளாவிய ரீதியில் பல வதை முகாம்கள் அமைக்கப்பட்டு சித்திரவதை மேற்கொண்டவர்கள் யார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அன்று ஆரம்பித்த இந்த சித்திரவதைகளுக்கு இன்று வரை நீதி கோரி உறவுகள் பேராடி வருகின்றனர் எனவும் அவர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட்டலந்த சித்திரவதை முகாம் ,ஓர் இரத்த சரித்திரம் - ஐக்கிய தேசிய கட்சியை சாடிய அமைச்சர் சந்திரசேகர் இலங்கையில் 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பட்டலந்த வதை முகாம் மாத்திரமல்ல நாடாளாவிய ரீதியல் பல வதைமுகாம்கள் காணப்பட்டதோடுஇ அவ்வாறான முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் வார்த்தைகளால் கூறமுடியாது அவை இரத்த சரித்திரம் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.மேலும் 1983 ஆம் ஆண்டு வரை ஜே.வி.பி அமைதியான முறையிலும் ஜனநாயக ரீதியிலும் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்திருந்தது. இவ்வாறான நிலையிலேயே 1983 ஆம் ஆண்டு ஜே.வி.பி கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது இதற்கு காரணம் அப்போது இடம்பெற்ற ஜூலை இனக் கலவரம் எனவும் குறித்த கலவரமே இலங்கையின் அரசியல் வரலாற்றின் திருப்பு முனை எனவும் தெரிவித்துள்ளார்.இவ்வாறான நிலையிலேயே அப்போதைய அரசாங்கத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அழிக்க முற்றபட்டனர்.அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியினர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினரிடமும் அரசாங்கத்திடமும், ஐ.நாவிடமும் கோரியிருந்தோம்.இவ்வாறான சூழ்நிலையிலேயே அப்போதைய அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுக்கின்ற பல்வேறு உடன்படிக்கைகளை செய்து கொண்டது. இதனால் நாடு அழிவடைவதை பொறுத்துக்கொள்ள முடியாமால் தீவிர போராட்டத்தை அன்று ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார்.எனவே பட்டலந்த வதை முகாமில் சித்திரவதை மேற்கொண்டவர்களை படுகொலை செய்தவர்களை தேடிக்கண்டு பிடித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.மேலும் மலையகத்தில் பல்வேறு பிரதேசங்களில் பல கலவரங்களும் படுகொலைகளும் இடம்பெற்று இரத்த ஆறு ஓடியது. அதற்கு எப்போது நீதி கிடைக்கும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.அத்துடன் அன்று அவ்வாறான மிக மோசமான செயல்களில் ஈடுபட்டவர்கள் வேறு யாருமல்ல ஐக்கிய தேசிய கட்சியினரே எனவும் பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான நிலையில் தற்போது அனைத்து குற்றச்செயல்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரே காரணம் என குற்றம் சுமத்துகின்றனர். அதுமட்டுமன்றி, 1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது அதன் பின்னணியில் ரணில் விக்ரமசிங்க இல்லையா 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக் கலவரத்தின் போது அதன் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி இல்லையா ஜே.ஆர்.ஜேவர்தன இல்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.அதுமாத்திரமன்றி யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குழியில் கல்வி கற்ற கிருஷாந்தி என் மாணவி படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு நாடாளாவிய ரீதியில் பல வதை முகாம்கள் அமைக்கப்பட்டு சித்திரவதை மேற்கொண்டவர்கள் யார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.அன்று ஆரம்பித்த இந்த சித்திரவதைகளுக்கு இன்று வரை நீதி கோரி உறவுகள் பேராடி வருகின்றனர் எனவும் அவர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.