திருகோணமலை கடற்கரையில் நேற்றையதினம் பட்டத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஒரு கோடி பெண் எழுச்சி பிரச்சார திட்டத்தின் ஓர் அங்கமாக E wings சுயாதீன பெண்கள் சிறுவர் மையத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குநர் காயத்திரி நளினகாந்தன் தலைமையில் திருகோணமலை இப் பட்டத்திருவிழா (01) நடைபெற்றது.
'தடைகளை தாண்டிய பயணம்' என்ற தொனிப்பொருளின் கீழ் குறித்த பட்டத்திருவிழா இடம்பெற்றது.
இதன்போது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட மகளிர் சங்கங்கள் கலந்து சிறப்பித்தனர்.
திருகோணமலை மாநகர சபை முதல்வர் க. செல்வராசா பிரதம விருந்தினராகவும், மாநகர சபை செயலாளர் திருவாளர் ஜெயவிஸ்ணு மற்றும் உப்பு வெளி பிரதேச சபை உறுப்பினர் .கி.விஜித்தா மற்றும் இவ் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் கு.குமுதா ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பெண்களுக்கான சமத்துவம், உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் எனவும் மைதானத்தில் ஆண்களை போன்று பெண்களும் சரிசமமாக செயற்பட வேண்டும் எனவும் திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராசா இதன்போது தெரிவித்தார்.
திருகோணமலை கடற்கரையில் பட்டத்திருவிழா; புதுவருடத்தில் கொண்டாட்டம் திருகோணமலை கடற்கரையில் நேற்றையதினம் பட்டத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.ஒரு கோடி பெண் எழுச்சி பிரச்சார திட்டத்தின் ஓர் அங்கமாக E wings சுயாதீன பெண்கள் சிறுவர் மையத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குநர் காயத்திரி நளினகாந்தன் தலைமையில் திருகோணமலை இப் பட்டத்திருவிழா (01) நடைபெற்றது.'தடைகளை தாண்டிய பயணம்' என்ற தொனிப்பொருளின் கீழ் குறித்த பட்டத்திருவிழா இடம்பெற்றது.இதன்போது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட மகளிர் சங்கங்கள் கலந்து சிறப்பித்தனர்.திருகோணமலை மாநகர சபை முதல்வர் க. செல்வராசா பிரதம விருந்தினராகவும், மாநகர சபை செயலாளர் திருவாளர் ஜெயவிஸ்ணு மற்றும் உப்பு வெளி பிரதேச சபை உறுப்பினர் .கி.விஜித்தா மற்றும் இவ் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் கு.குமுதா ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.பெண்களுக்கான சமத்துவம், உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் எனவும் மைதானத்தில் ஆண்களை போன்று பெண்களும் சரிசமமாக செயற்பட வேண்டும் எனவும் திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராசா இதன்போது தெரிவித்தார்.