• May 16 2026

டித்வா புயல் பாதிப்பு இழப்பீட்டுக்கான காசோலை வழங்கி வைப்பு!

Ziya / May 15th 2026, 3:59 pm
image

சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வும் வீடொன்றுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (15) சேருநுவர பிரதேச செயலாளர் உரேஸ் நிஷாந்த தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவினால் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 17 பயனாளிகளுக்கு காசோலை வழங்கி வைக்கப்பட்டதோடு வீடொன்றுக்கான அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டது.


இவ் காசோலையானது வீடுகளில் பாதிப்புகளுக்கு ஏற்ற வகையில் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் சேருநுவர பிரதேச சபையின் தவிசாளர் ,பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.    


டித்வா புயல் பாதிப்பு இழப்பீட்டுக்கான காசோலை வழங்கி வைப்பு சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வும் வீடொன்றுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (15) சேருநுவர பிரதேச செயலாளர் உரேஸ் நிஷாந்த தலைமையில் இடம்பெற்றது.இதன்போது அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவினால் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 17 பயனாளிகளுக்கு காசோலை வழங்கி வைக்கப்பட்டதோடு வீடொன்றுக்கான அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டது.இவ் காசோலையானது வீடுகளில் பாதிப்புகளுக்கு ஏற்ற வகையில் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது .இந்நிகழ்வில் சேருநுவர பிரதேச சபையின் தவிசாளர் ,பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.    

Advertisement

Advertisement

Advertisement