• Sep 20 2024

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கொடுப்பனவு..! வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Jul 3rd 2023, 7:14 pm
image

Advertisement

நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட் டுள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் ‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன கூறினார்.

இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளர் குழு கூட்டம் இரத்தினபுரி மாநகரசபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. 

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மைய கணக்கெடுப்பின்படி, 28 இலட்சம் பேர் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தில் உள்வாங் கப்படவுள்ளனர். 

இதனை நாம் 40 இலட்சம் வரை அதிகரிக்க முடியும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெறப்படும் அல்லது பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும். 

உண்மைத் தகவல்களை வழங்காமல் அரசியல் ரீதியாகவும் பல்வேறு வகையிலும் கடந்த காலங்களில் சனசவிய, மற்றும் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதனை மறுசீரமைப்பு செய்து உண்மையாக கிடைக்க வேண்டிய ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் நோக்கமாகும்.

ஏழைத்தன்மையை தொடர்ந்து வைத்திருந்து அதன்மூலம் அரசியல் செய்ய நாம் விரும்பவில்லை.

அஸ்வெசும நிவாரணத்திட்டத்தில் உள்வாங்கப் படாதவர்கள் அவர்களின் கோரிக்கைளை நிகழ்நிலையிலும் அல்லது பிரதேச செயலகத்தில் அல்லது ஜனாதிபதி காரியாலயத்திலும் சமர்ப்பிக்க முடியும். அதனை விடுத்து கூக்குரலிட்டு பயனில்லை. எவ்வளவு காலத்துக்கு எம்மால் கூக்குரலிட முடியும்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய காலத்திலும் சண்டையிட்டு கொள்கின்றனர். 

சண்டையிடுவதன் நோக்கம் அவர்கள் அரசாங்கத்துக்கு சரியான யோசனைகளை முன்வைக்க முன்வருவதில்லை.

அவர்களிடம் முன்வைப்பதற்கான சரியான திட்டம் எதுவுமில்லை.

ஊடகவியலாளர்கள், தற்போது ஊடகத்துறைக்கு அரசாங்கம் விலங்கு போடுவதாக கூறுகின்றனர். ஊடகத்துறையை மறுசீரமைப்பு செய்து அதனை அபிவிருத்தி செய்வதே எமது பிரதான நோக்கம். 

சிங்கப்பூர் நாட்டிலுள்ள சட்டத்தைப்போன்ற ஊடக சட்டத்தையே எமது நாட்டிலும் அறிமுகப் படுத்தினால் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் நன்மையடைவார்கள்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் வீதியிலிறங்கி போராடுவார்கள். அதன் பின்னர் அது அரசியல் போராட்டமாக மாறும். இவ்வாறான சூழ்நிலையில் நாம் வழங்கப்பட்ட நிவாரணத்தை இல்லாதொழிப்போமா?


ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிமட்டுமே எமக்கு கிடைத்தது. அதன்மூலம் இன்று நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவி வரை வந்துள்ளோம். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அப்போது பிரதமராக இருந்தார். 

கோட்டாபய பதவியேற்ற நிகழ்வில் நான் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கலந்து கொண்டேன். 

இதன்போது பலர் என்னை வசைப்பாடினர். ஒருவர் பின் ஒருவராக எமது கட்சி அமைச்சர்கள் பதவி விலகினர்.

அவர்கள் அன்று பதவி விலகாமல் கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எமது கட்சி வெற்றிப்பெற்றிருக்கும். ஆனால் எம்மை விட்டுப்பிரிந்தது மட்டுமல்லாமல் எம்மை ஏளனப்படுத்தினர்.

அன்று ஏளனப்படுத்தியவர்கள் இன்று எம்மை எதிர்க்கின்றனர். இதுதான் இன்றைய அரசியல். ஆனால் நாம் இன்றைய சூழ்நிலையில் எம்மிடையே அரசியல் பேதம் கிடையாது.

நாம் இலங்கையர் என்ற கொள்கையுடனேயே செயற்பட்டு, வெளிநாட்டு உள்நாட்டு சக்திகளுக்கு அடிபணியாது தொடர்ந்து நாட்டை முன்னேற்ற ஒத்துழைப்போம்.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கொடுப்பனவு. வெளியான அறிவிப்பு samugammedia நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட் டுள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் ‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன கூறினார்.இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளர் குழு கூட்டம் இரத்தினபுரி மாநகரசபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மைய கணக்கெடுப்பின்படி, 28 இலட்சம் பேர் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தில் உள்வாங் கப்படவுள்ளனர். இதனை நாம் 40 இலட்சம் வரை அதிகரிக்க முடியும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெறப்படும் அல்லது பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும். உண்மைத் தகவல்களை வழங்காமல் அரசியல் ரீதியாகவும் பல்வேறு வகையிலும் கடந்த காலங்களில் சனசவிய, மற்றும் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மறுசீரமைப்பு செய்து உண்மையாக கிடைக்க வேண்டிய ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் நோக்கமாகும்.ஏழைத்தன்மையை தொடர்ந்து வைத்திருந்து அதன்மூலம் அரசியல் செய்ய நாம் விரும்பவில்லை.அஸ்வெசும நிவாரணத்திட்டத்தில் உள்வாங்கப் படாதவர்கள் அவர்களின் கோரிக்கைளை நிகழ்நிலையிலும் அல்லது பிரதேச செயலகத்தில் அல்லது ஜனாதிபதி காரியாலயத்திலும் சமர்ப்பிக்க முடியும். அதனை விடுத்து கூக்குரலிட்டு பயனில்லை. எவ்வளவு காலத்துக்கு எம்மால் கூக்குரலிட முடியும்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய காலத்திலும் சண்டையிட்டு கொள்கின்றனர். சண்டையிடுவதன் நோக்கம் அவர்கள் அரசாங்கத்துக்கு சரியான யோசனைகளை முன்வைக்க முன்வருவதில்லை.அவர்களிடம் முன்வைப்பதற்கான சரியான திட்டம் எதுவுமில்லை.ஊடகவியலாளர்கள், தற்போது ஊடகத்துறைக்கு அரசாங்கம் விலங்கு போடுவதாக கூறுகின்றனர். ஊடகத்துறையை மறுசீரமைப்பு செய்து அதனை அபிவிருத்தி செய்வதே எமது பிரதான நோக்கம். சிங்கப்பூர் நாட்டிலுள்ள சட்டத்தைப்போன்ற ஊடக சட்டத்தையே எமது நாட்டிலும் அறிமுகப் படுத்தினால் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் நன்மையடைவார்கள்.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் வீதியிலிறங்கி போராடுவார்கள். அதன் பின்னர் அது அரசியல் போராட்டமாக மாறும். இவ்வாறான சூழ்நிலையில் நாம் வழங்கப்பட்ட நிவாரணத்தை இல்லாதொழிப்போமாஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிமட்டுமே எமக்கு கிடைத்தது. அதன்மூலம் இன்று நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவி வரை வந்துள்ளோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அப்போது பிரதமராக இருந்தார். கோட்டாபய பதவியேற்ற நிகழ்வில் நான் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கலந்து கொண்டேன். இதன்போது பலர் என்னை வசைப்பாடினர். ஒருவர் பின் ஒருவராக எமது கட்சி அமைச்சர்கள் பதவி விலகினர்.அவர்கள் அன்று பதவி விலகாமல் கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எமது கட்சி வெற்றிப்பெற்றிருக்கும். ஆனால் எம்மை விட்டுப்பிரிந்தது மட்டுமல்லாமல் எம்மை ஏளனப்படுத்தினர்.அன்று ஏளனப்படுத்தியவர்கள் இன்று எம்மை எதிர்க்கின்றனர். இதுதான் இன்றைய அரசியல். ஆனால் நாம் இன்றைய சூழ்நிலையில் எம்மிடையே அரசியல் பேதம் கிடையாது.நாம் இலங்கையர் என்ற கொள்கையுடனேயே செயற்பட்டு, வெளிநாட்டு உள்நாட்டு சக்திகளுக்கு அடிபணியாது தொடர்ந்து நாட்டை முன்னேற்ற ஒத்துழைப்போம்.

Advertisement

Advertisement

Advertisement