காதல் திருமணம் செய்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை இந்தியாவில் இருந்து நாடு கடத்தும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பவித்ரா கீத்தீஸ்வரன், சுற்றுலா விசாவில் இந்தியா சென்ற நிலையில், திருச்சி லால்குடியைச் சேர்ந்த அருண்குமாரை காதலித்து கடந்த ஜூன் 4ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்.
எனினும், அவரது விசா காலாவதியானதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்த அயல்நாட்டவருக்கான மண்டல பதிவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதனை எதிர்த்து பவித்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் கர்ப்பமாக இருப்பதையும் தம்பதியரின் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
முக்கியமாக, தம்பதியினர் இந்திய சட்டத்துக்கு உட்பட்டு 60 நாட்களுக்குள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுவரை பவித்ராவை இந்தியாவை விட்டு வெளியேற்றவோ, நாடு கடத்தவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கர்ப்பிணியான பவித்ராவுக்கு தேவையான அரசு மருத்துவ உதவிகளை தடையின்றி வழங்கவும் லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடன் பிறக்கப்போகும் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காதல் திருமணம் செய்த இலங்கை கர்ப்பிணிப் பெண்ணுக்கு நிம்மதி இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு காதல் திருமணம் செய்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை இந்தியாவில் இருந்து நாடு கடத்தும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.இலங்கையைச் சேர்ந்த பவித்ரா கீத்தீஸ்வரன், சுற்றுலா விசாவில் இந்தியா சென்ற நிலையில், திருச்சி லால்குடியைச் சேர்ந்த அருண்குமாரை காதலித்து கடந்த ஜூன் 4ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்.எனினும், அவரது விசா காலாவதியானதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்த அயல்நாட்டவருக்கான மண்டல பதிவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.இதனை எதிர்த்து பவித்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் கர்ப்பமாக இருப்பதையும் தம்பதியரின் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.முக்கியமாக, தம்பதியினர் இந்திய சட்டத்துக்கு உட்பட்டு 60 நாட்களுக்குள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதுவரை பவித்ராவை இந்தியாவை விட்டு வெளியேற்றவோ, நாடு கடத்தவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், கர்ப்பிணியான பவித்ராவுக்கு தேவையான அரசு மருத்துவ உதவிகளை தடையின்றி வழங்கவும் லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடன் பிறக்கப்போகும் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.