• Oct 05 2024

பாணின் நிறை குறைந்தால் வர்த்தகர்களுக்கு அபராதம் - நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு

Tharun / Feb 3rd 2024, 12:31 pm
image

Advertisement

ஒரு பாண் இறாத்தலுக்கு தேவையான எடை இல்லை என்றால் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நீரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாண் இறாத்தல் ஒன்றின் எடை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய (02) தினம் வெளியிடப்பட்டது.

அதன்படி, பாண் இறாத்தல் ஒன்றிற்காக 450 கிராம் எனவும் அரை இறாத்தல் பாணிற்கான நிகர எடை 225 கிராமாக இருத்தல் அவசியம் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த எடை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென அந்த சபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறைக்கு அமைய பாண் விற்பனையில் ஈடுபடாத வர்ததகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


பாணின் நிறை குறைந்தால் வர்த்தகர்களுக்கு அபராதம் - நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு ஒரு பாண் இறாத்தலுக்கு தேவையான எடை இல்லை என்றால் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நீரியெல்ல தெரிவித்துள்ளார்.பாண் இறாத்தல் ஒன்றின் எடை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய (02) தினம் வெளியிடப்பட்டது.அதன்படி, பாண் இறாத்தல் ஒன்றிற்காக 450 கிராம் எனவும் அரை இறாத்தல் பாணிற்கான நிகர எடை 225 கிராமாக இருத்தல் அவசியம் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.குறித்த எடை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென அந்த சபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நடைமுறைக்கு அமைய பாண் விற்பனையில் ஈடுபடாத வர்ததகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement