• Nov 23 2024

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்! மீண்டும் மீள முடியாத நிலை!! Samugammedia

Tamil nila / Dec 21st 2023, 7:09 pm
image

வெள்ள அனர்த்தங்களுக்கென அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தும் இன்றைய தினம் முழுமையாக அகற்ற பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக  பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்கவைக்க அமைக்கப்பட்ட ஏழு பாதுகாப்பு அமைவிடங்களிலும் தங்கியிருந்த  மக்கள் அங்கிருந்து இயல்பு நிலைக்கு  திரும்பியுள்ளதாக இன்றைய நாளுக்கான முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின்  அறிக்கையில் இன்றைய (21.12.2023) 4.30 மணி அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையிலே, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு  இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்த மக்கள் நேற்று மாலை முதல் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட  ஏழு இடைத்தங்கல் முகாம்களில் இருந்தும் மக்கள் இன்று முழுமையாக வெளியேறியதனால் குறித்த முகாம்கள் அகற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட தகவலின் அடடிப்படையில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே  333 குடும்பங்களை சேர்ந்த 1076 பேரும் ,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 795 குடும்பங்களை சேர்ந்த 2362 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 450 குடும்பங்களை சேர்ந்த 1366 பேரும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில்  251 குடும்பங்களை சேர்ந்த 765 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில்  480 குடும்பங்களை சேர்ந்த 1299 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 48 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்தமாக   2327 குடும்பங்களை சேர்ந்த 6916 பேர் வெள்ள அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  


வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர் மீண்டும் மீள முடியாத நிலை Samugammedia வெள்ள அனர்த்தங்களுக்கென அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தும் இன்றைய தினம் முழுமையாக அகற்ற பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக  பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்கவைக்க அமைக்கப்பட்ட ஏழு பாதுகாப்பு அமைவிடங்களிலும் தங்கியிருந்த  மக்கள் அங்கிருந்து இயல்பு நிலைக்கு  திரும்பியுள்ளதாக இன்றைய நாளுக்கான முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின்  அறிக்கையில் இன்றைய (21.12.2023) 4.30 மணி அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையிலே, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு  இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்த மக்கள் நேற்று மாலை முதல் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட  ஏழு இடைத்தங்கல் முகாம்களில் இருந்தும் மக்கள் இன்று முழுமையாக வெளியேறியதனால் குறித்த முகாம்கள் அகற்றப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட தகவலின் அடடிப்படையில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே  333 குடும்பங்களை சேர்ந்த 1076 பேரும் ,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 795 குடும்பங்களை சேர்ந்த 2362 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 450 குடும்பங்களை சேர்ந்த 1366 பேரும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில்  251 குடும்பங்களை சேர்ந்த 765 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில்  480 குடும்பங்களை சேர்ந்த 1299 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 48 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்தமாக   2327 குடும்பங்களை சேர்ந்த 6916 பேர் வெள்ள அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement