• Nov 28 2024

அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்களே அவதானம்- மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை...!! Samugammedia

Tamil nila / Dec 17th 2023, 8:03 am
image

அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று (17.12.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலையானது எதிர்வரும் 20ஆம் தேதி வரை தொடரக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன், இன்னும் ஒரு குறைந்த காற்றழுத்தம் ஒன்று எதிர்வரும் 24ஆம் திகதி அளவில் உருவாகி அதன் மூலமும் மழைவீழ்ச்சி வடக்கு மாகாணத்துக்கு அதிக அளவு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. 

இவ்வாறு கிடைக்கின்ற மழை வீழ்ச்சியானது மிக கனதியாக குறுகிய நேரத்தில் கிடைப்பதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீதிகள் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன் இந்நீர் வழிந்து ஓட முடியாத நிலைமையையும் காணப்படுகின்றது. அத்தோடு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. 

இரணைமடு, முத்தையன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது. எனவே குளங்களின் கீழ் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அதே வேளை குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வழிந்து ஓடக்கூடிய வசதிகள் இன்மையினால் தேங்கி நிற்கின்றன. இதனால் பல்வேறு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் கிராம சேவையாளரை தொடர்பு கொண்டு தங்கள் தங்களுடைய வீடுகளில் இருக்க முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்ற பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அத்துடன் தற்போது நிலவும் காலநிலை காரணமாக கால்நடைகளுக்கு ஏற்படும் இழப்புக்களை உடனடியாக கால்நடை வைத்தியர்களுக்கு தெரியப்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இம்மழை விடுகின்ற சந்தர்ப்பங்களில் மழை நீர் வழிந்து ஓட அது தடைப்பட்டு இருக்கின்ற தடைகளினை மக்கள் அனைவரும் இணைந்து அகற்றி, எதிர்வரும் மழை மூலம் ஏற்படுகின்ற வெள்ளத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அனர்த்த முகாமை பிரிவு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் கேட்டுக்கொள்கின்றது.

அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்களே அவதானம்- மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை. Samugammedia அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று (17.12.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலையானது எதிர்வரும் 20ஆம் தேதி வரை தொடரக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன், இன்னும் ஒரு குறைந்த காற்றழுத்தம் ஒன்று எதிர்வரும் 24ஆம் திகதி அளவில் உருவாகி அதன் மூலமும் மழைவீழ்ச்சி வடக்கு மாகாணத்துக்கு அதிக அளவு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. இவ்வாறு கிடைக்கின்ற மழை வீழ்ச்சியானது மிக கனதியாக குறுகிய நேரத்தில் கிடைப்பதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீதிகள் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன் இந்நீர் வழிந்து ஓட முடியாத நிலைமையையும் காணப்படுகின்றது. அத்தோடு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. இரணைமடு, முத்தையன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது. எனவே குளங்களின் கீழ் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதே வேளை குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வழிந்து ஓடக்கூடிய வசதிகள் இன்மையினால் தேங்கி நிற்கின்றன. இதனால் பல்வேறு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் கிராம சேவையாளரை தொடர்பு கொண்டு தங்கள் தங்களுடைய வீடுகளில் இருக்க முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்ற பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் தற்போது நிலவும் காலநிலை காரணமாக கால்நடைகளுக்கு ஏற்படும் இழப்புக்களை உடனடியாக கால்நடை வைத்தியர்களுக்கு தெரியப்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் இம்மழை விடுகின்ற சந்தர்ப்பங்களில் மழை நீர் வழிந்து ஓட அது தடைப்பட்டு இருக்கின்ற தடைகளினை மக்கள் அனைவரும் இணைந்து அகற்றி, எதிர்வரும் மழை மூலம் ஏற்படுகின்ற வெள்ளத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அனர்த்த முகாமை பிரிவு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் கேட்டுக்கொள்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement