• Nov 19 2024

மக்கள் மீண்டும் துன்பப்படுவதற்குத் தயாராக இல்லை ; ரணிலுக்கே வெற்றி - செந்தில் தொண்டமான் திட்டவட்டம்..!

Sharmi / Sep 18th 2024, 5:44 pm
image

தமிழ் பேசும் மக்கள் வாழும் மலையகத் தோட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கில் மாத்திரமன்றி மலையகத்திலும் நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுவதாகவும், மக்கள் மீண்டும் துன்பப்படுவதற்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது .

இன்றைய பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருவதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும், செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு  பிறகு மீண்டும் வரிசையில் நிற்காமல் இருக்க முடிவெடுப்பது இன்றியமையாதது என்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதிக்கு பதிலாக வேறு வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தாம் தயாரில்லை எனவும், முழுமையான அபிவிருத்தியை அடைவதற்கு தடையாகவோ அல்லது மாற்றமோ ஏற்பட்டால் பாதிப்பும் பொருளாதாரச் சுமையும் மக்கள் மீதே விழும் எனவும் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை விட அதிக சதவீத வாக்குகளைப் பெற்று ரணில் விக்ரமசிங்கவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வெற்றி பெறச் செய்வார்கள் என்றும், ஜனாதிபதியின் வெற்றிக்கு தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் மீண்டும் துன்பப்படுவதற்குத் தயாராக இல்லை ; ரணிலுக்கே வெற்றி - செந்தில் தொண்டமான் திட்டவட்டம். தமிழ் பேசும் மக்கள் வாழும் மலையகத் தோட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கில் மாத்திரமன்றி மலையகத்திலும் நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் சுட்டிக்காட்டினார்.தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுவதாகவும், மக்கள் மீண்டும் துன்பப்படுவதற்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது .இன்றைய பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருவதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும், செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு  பிறகு மீண்டும் வரிசையில் நிற்காமல் இருக்க முடிவெடுப்பது இன்றியமையாதது என்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதிக்கு பதிலாக வேறு வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தாம் தயாரில்லை எனவும், முழுமையான அபிவிருத்தியை அடைவதற்கு தடையாகவோ அல்லது மாற்றமோ ஏற்பட்டால் பாதிப்பும் பொருளாதாரச் சுமையும் மக்கள் மீதே விழும் எனவும் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை விட அதிக சதவீத வாக்குகளைப் பெற்று ரணில் விக்ரமசிங்கவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வெற்றி பெறச் செய்வார்கள் என்றும், ஜனாதிபதியின் வெற்றிக்கு தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement