எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி தவராசாவின் வருகையை மக்கள் பரவலாக எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தரப்பு என்ன முடிவெடுப்பது என்பது குறித்து திக்குமுக்கு ஆடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே தமிழ்த் தேசியத்தின் பால் பற்று கொண்டவன் என்ற அடிப்படையிலும் தமிழரசு கட்சியின் ஊர்காவற்துறை தொகுதியின் செயலாளர் என்ற அடிப்படையிலும் இந்த அறிக்கையை பொறுப்புடன் விடுக்கிறேன்
மக்களின் எதிர்பார்ப்பு மாற்றம் பெற்றிருக்கின்ற இந்த வேளையிலே புதிய முகங்களை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் சமூகத்திற்காக தொடர்ச்சியாக அயராது உழைப்பவன் என்பதோடு இளையவர்கள் தேர்தலில் இறங்கவேண்டும் என்கின்ற கோரிக்கையின் நிமித்தமும் எனது பெயரை விளித்து ஊர்காவற்துறை தொகுதியின் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படவேண்டுமென்று பரவலாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
ஆனாலும் இன்னும் பல சேவைகளை நான் ஆற்ற வேண்டியிருப்பதாலும் மென்மேலும் அனுபவத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற நோக்கிலும் அக்கோரிக்கைகளை அன்போடு நிராகரிப்பதோடு கடந்த 2010 ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எந்தவொரு தேர்தலிலும் ஊர்காவற்துறை தொகுதிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அடிப்படையிலும் 1983 க்கு பின்னர் வெற்றிடமாகக் காணப்படுகின்ற தீவகத்திற்கான நாடாளுமன்ற ஆசனத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஆளுமை மிகுந்தவர் என்ற வகையிலும் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா அவர்களை ஊர்காவற்துறை தொகுதியின் சார்பில் யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளராக எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
அத்தோடு தமிழ் தேசியத்தின் பால் பற்று கொண்டு தமிழ் அரசுக் கட்சியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அயராது உழைக்கின்ற சாவகச்சேரியைச் சேர்ந்த அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களையும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தென்மராட்சி பிராந்தியத்தில் மாத்திரமன்றி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் ஏனைய தொகுதிகளிலும் வாக்குகளை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்பதையும் தமிழரசு கட்சி கருத்தில் கொள்ள வேண்டும் என்று வினயமாக வேண்டிக்கொள்கிறேன்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா அவர்களை முதன்மைப்படுத்தி முன்மொழிவதற்கான முக்கியமான காரணங்கள் பின்வருமாறு
01 - கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக முதலாவதாக பதிவு செய்யப்பட்டிருந்த அவருடைய பெயர் இறுதி நேரத்தில் சதி முயற்சியால் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
02. கடந்த தேர்தலில் அவருக்கு தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்படவில்லை அதற்காக அவர் ஆர்ப்பாட்டம் செய்யவும் இல்லை.
அரசியல் ரீதியாக தனக்கு எவ்விதமான நலன்களையும் கட்சி வழங்காத போதிலும் தொடர்ந்தும் கட்சிக்காக பாடுபட்டு வருவதோடு கட்சியின் நலனுக்காக எப்போதும் முன்னரங்கில் நின்று சேவையாற்றி வருகின்ற அவரது கட்சிக்கான உழைப்பை கட்சி மதிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்காக நியமனம் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
03 .தமிழ் தேசியத்தின் பால் மக்கள் கொண்டிருக்கின்ற பற்று எப்போது மாறாதது ஆனால் சில நபர்களின் நடவடிக்கை காரணமாக கட்சியின் தமிழ் தேசிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா அவர்களை வேட்பாளராக களம் இறக்குவது தமிழ் தேசியத்தின்பால் பற்று கொண்ட அனைவரையும் கட்சியின் பால் ஒன்று திரட்டுகின்ற ஒரு சிறந்த முயற்சியாகவும் முன்மாதிரியாகவும் அமையும் என்பதை உறுதியாக நம்புகிறேன்
04. தமிழ் தேசியத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து விதமான வழக்குகளையும் எதிர்கொள்வதில் முன்னணியாக நின்று சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு தன்னலமற்ற மனிதர் என்ற அடிப்படையில் அவர் இம்முறை கட்டாயம் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவே அதனை கட்சி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளர் கருணாகரன் நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தவராசாவின் வருகையை பரவலாக எதிர்பார்க்கும் மக்கள் -நாவலன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி தவராசாவின் வருகையை மக்கள் பரவலாக எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தரப்பு என்ன முடிவெடுப்பது என்பது குறித்து திக்குமுக்கு ஆடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே தமிழ்த் தேசியத்தின் பால் பற்று கொண்டவன் என்ற அடிப்படையிலும் தமிழரசு கட்சியின் ஊர்காவற்துறை தொகுதியின் செயலாளர் என்ற அடிப்படையிலும் இந்த அறிக்கையை பொறுப்புடன் விடுக்கிறேன் மக்களின் எதிர்பார்ப்பு மாற்றம் பெற்றிருக்கின்ற இந்த வேளையிலே புதிய முகங்களை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் சமூகத்திற்காக தொடர்ச்சியாக அயராது உழைப்பவன் என்பதோடு இளையவர்கள் தேர்தலில் இறங்கவேண்டும் என்கின்ற கோரிக்கையின் நிமித்தமும் எனது பெயரை விளித்து ஊர்காவற்துறை தொகுதியின் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படவேண்டுமென்று பரவலாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இன்னும் பல சேவைகளை நான் ஆற்ற வேண்டியிருப்பதாலும் மென்மேலும் அனுபவத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற நோக்கிலும் அக்கோரிக்கைகளை அன்போடு நிராகரிப்பதோடு கடந்த 2010 ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எந்தவொரு தேர்தலிலும் ஊர்காவற்துறை தொகுதிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அடிப்படையிலும் 1983 க்கு பின்னர் வெற்றிடமாகக் காணப்படுகின்ற தீவகத்திற்கான நாடாளுமன்ற ஆசனத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஆளுமை மிகுந்தவர் என்ற வகையிலும் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா அவர்களை ஊர்காவற்துறை தொகுதியின் சார்பில் யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளராக எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன். அத்தோடு தமிழ் தேசியத்தின் பால் பற்று கொண்டு தமிழ் அரசுக் கட்சியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அயராது உழைக்கின்ற சாவகச்சேரியைச் சேர்ந்த அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களையும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தென்மராட்சி பிராந்தியத்தில் மாத்திரமன்றி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் ஏனைய தொகுதிகளிலும் வாக்குகளை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்பதையும் தமிழரசு கட்சி கருத்தில் கொள்ள வேண்டும் என்று வினயமாக வேண்டிக்கொள்கிறேன். ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா அவர்களை முதன்மைப்படுத்தி முன்மொழிவதற்கான முக்கியமான காரணங்கள் பின்வருமாறு 01 - கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக முதலாவதாக பதிவு செய்யப்பட்டிருந்த அவருடைய பெயர் இறுதி நேரத்தில் சதி முயற்சியால் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 02. கடந்த தேர்தலில் அவருக்கு தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்படவில்லை அதற்காக அவர் ஆர்ப்பாட்டம் செய்யவும் இல்லை.அரசியல் ரீதியாக தனக்கு எவ்விதமான நலன்களையும் கட்சி வழங்காத போதிலும் தொடர்ந்தும் கட்சிக்காக பாடுபட்டு வருவதோடு கட்சியின் நலனுக்காக எப்போதும் முன்னரங்கில் நின்று சேவையாற்றி வருகின்ற அவரது கட்சிக்கான உழைப்பை கட்சி மதிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்காக நியமனம் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.03 .தமிழ் தேசியத்தின் பால் மக்கள் கொண்டிருக்கின்ற பற்று எப்போது மாறாதது ஆனால் சில நபர்களின் நடவடிக்கை காரணமாக கட்சியின் தமிழ் தேசிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா அவர்களை வேட்பாளராக களம் இறக்குவது தமிழ் தேசியத்தின்பால் பற்று கொண்ட அனைவரையும் கட்சியின் பால் ஒன்று திரட்டுகின்ற ஒரு சிறந்த முயற்சியாகவும் முன்மாதிரியாகவும் அமையும் என்பதை உறுதியாக நம்புகிறேன் 04. தமிழ் தேசியத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து விதமான வழக்குகளையும் எதிர்கொள்வதில் முன்னணியாக நின்று சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு தன்னலமற்ற மனிதர் என்ற அடிப்படையில் அவர் இம்முறை கட்டாயம் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவே அதனை கட்சி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளர் கருணாகரன் நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.