• Apr 16 2026

மக்களே அச்சப்பட வேண்டாம்! - எரிசக்தி நெருக்கடி குறித்து அநுரவின் அதிரடி உத்தரவாதம்!

Chithra / Mar 11th 2026, 8:22 am
image

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், 

இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு முக்கியமான ஆறுதல் செய்தியை வழங்கியுள்ளார்.

கொழும்பில் நேற்று  நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச ரீதியாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவினாலும், இலங்கை அரசு முன்நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு மோதல்களால் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான கையிருப்பு இலங்கையிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், தட்டுப்பாடின்றி விநியோகத்தைப் பேணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அரசு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும், தற்போதைய சர்வதேச பதற்ற நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

"நாட்டின் வளங்களை நாம் பொறுப்புடன் கையாள வேண்டும். எனவே, பொதுமக்கள் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்," என அவர் வேண்டுகோள் விடுத்தார்.


மக்களே அச்சப்பட வேண்டாம் - எரிசக்தி நெருக்கடி குறித்து அநுரவின் அதிரடி உத்தரவாதம் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு முக்கியமான ஆறுதல் செய்தியை வழங்கியுள்ளார்.கொழும்பில் நேற்று  நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச ரீதியாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவினாலும், இலங்கை அரசு முன்நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.மத்திய கிழக்கு மோதல்களால் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான கையிருப்பு இலங்கையிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், தட்டுப்பாடின்றி விநியோகத்தைப் பேணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.அரசு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும், தற்போதைய சர்வதேச பதற்ற நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்."நாட்டின் வளங்களை நாம் பொறுப்புடன் கையாள வேண்டும். எனவே, பொதுமக்கள் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்," என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement