• Oct 18 2024

மக்கள் ஆதரவு இல்லை - சிவப்பு – மஞ்சள் நோட்டீஸ் காட்சிப்படுத்த நடவடிக்கை !

Tamil nila / May 13th 2023, 4:24 pm
image

Advertisement

கொழும்பில் டெங்கு நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நகரங்களில் வசிக்கின்ற மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என கொழும்பு நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொழும்பு குருந்துவத்தை போன்ற பகுதிகளில் இந்த நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்துவத்தை பகுதியிலுள்ள வீடுகளின் வாயில் பகுதிகளில் அதிகாரிகள் நடமாடவேண்டிய தேவை உள்ளதாகவும் கொழும்பு நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான சமயங்களில் வாயில்களில் மஞ்சள் நோட்டீஸ் காட்சிப்படுத்தப்படுவதாகவும், மஞ்சள் நோட்டீஸ் காட்டப்படும் போது குடியிருப்பு வாசிகள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைக்குமாறும் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் இருந்தால் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கொழும்பு நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆதரவு இல்லை - சிவப்பு – மஞ்சள் நோட்டீஸ் காட்சிப்படுத்த நடவடிக்கை கொழும்பில் டெங்கு நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நகரங்களில் வசிக்கின்ற மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என கொழும்பு நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.குறிப்பாக கொழும்பு குருந்துவத்தை போன்ற பகுதிகளில் இந்த நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குருந்துவத்தை பகுதியிலுள்ள வீடுகளின் வாயில் பகுதிகளில் அதிகாரிகள் நடமாடவேண்டிய தேவை உள்ளதாகவும் கொழும்பு நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.எனவே இவ்வாறான சமயங்களில் வாயில்களில் மஞ்சள் நோட்டீஸ் காட்சிப்படுத்தப்படுவதாகவும், மஞ்சள் நோட்டீஸ் காட்டப்படும் போது குடியிருப்பு வாசிகள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைக்குமாறும் விஜயமுனி தெரிவித்துள்ளார்.மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் இருந்தால் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கொழும்பு நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement