• Jul 20 2024

மறைந்த மருத்துவர் ஜெயக்குலராசாவின் மறைவிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரியக்கம் இரங்கல்....!

Tamil nila / Jun 21st 2024, 8:28 pm
image

Advertisement

மறைந்த மருத்துவர் து.வி.ஜெயக்குலராசா அவர்களின் மறைவிற்க்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரியக்கம் இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளது.

அதில்  தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுபெரும் தூண் சரிந்தது மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜாவின் மறைவு தமிழர் தேசத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது ஆத்மார்த்தமான அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்து நிற்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர் அதன் முழு விபரமும் வருமாறு

தனது வாழ்நாளில் அதிகமான காலப்பகுதியை தேசவிடுதலைப் பணிக்காக அர்ப்பணித்தவர்.  ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தின் ஆரம்பம் முதலே தன்னை தமிழினத்தின் ஒப்பற்ற உயரிய உன்னத விடுதலைப்பணிக்காக அர்ப்பணித்து தனது தியாகம் நிறைந்த பணியினாலும், போர்க்காலங்களில் மக்கள் துயர்துடைப்பு பணிகளிலும், மருத்துவ சேவையிலும் தன்னை அர்ப்பணித்து பணியாற்றியதன் மூலம் எம்மின மக்களின் உள்ளங்களிலும், எம் தேசத்தலைவரின் இதயத்திலும் நீங்காத இடம்பிடித்தன் மூலம் எம் தேச ஆன்மாவில் நீக்கமற நிலைத்து ஈழத்தமிழர் வரலாற்றில் தனிமனித சரித்திரமாக மிளிர்கின்றார்.

இளம் மருத்துவராக ஜெயகுலராஜா அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறையின் உச்சநிலையாக தமிழின ஒடுக்குமுறையின் அடிமைச்சசாசனமான 1972 ல் அன்றைய பேரினவாத அரசினால் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் அரச உத்தியோத்தராக சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து தனது இனமான கொள்கைக்கு முன்பாக தனது தொழிலை துச்சமென நினைத்து தூக்கி எறிந்த இனமான செம்மலாவார்.

தாயகத்தில் பேரினவாத ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும் உச்சம் பெற்றிருந்த நிலையில் தனது உயிரைக் கூட ஒரு பொருட்டாக எண்ணாது ஈழத்தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் தனது மருத்துவப்பணியினையும் மனிதநேயப்பணியினையும் மிக அர்ப்பணிப்புடன் வழங்கினார்.  எடுத்துக்காட்டாக 1982 ல் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த போராளிகள் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாது. ஏனென்றால் இராணுத்தினரால் இலகுவாக அடையாளம் காணமுடியும். இவ்வாறான ஆபத்து நிறைந்த சூழலில் அவர்களை தான் பணியாற்றிய திருச்சபை மருத்துவமனையாகிய புத்தூர் புனித லூக்கா மருத்துமனையில் சிகிச்சையளித்து தனது சகோதரர் அருட்தந்தையாக பணியாற்றிய புன்னாலைக்கட்டுவன் நல்லாயன் ஆலயத்தில் பாதுகாத்தார். இதன் விளைவாக இவரும் அவரின் சகோதரர் வணபிதா.ஜெயதிலகராஜாவும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டனர். 

1983ல் தமிழினத்துக்கு எதிராக நடந்த அரசபயங்கரவாதத்தின் கொலை வெறியாட்டமான வெலிக்கடை படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பி பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மட்டு சிறையுடைப்பில் சிறை மீண்டு தமிழகம் சென்றார்.

தமிழகத்திலும் தனது மானிடநேய மருத்துவப்பணியிலும் மக்கள் துயர்துடைப்பு பணியினையும் தொடர்ந்தார்.  அங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று ஈழஅகதிகள் மத்தியில் அர்ப்பணிப்பு மிக்க பணியாற்றினார். 1987 ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தம்பதிகளுடன் தாயகம் திரும்பி மீண்டும் தாயகத்தில் தனது உயரிய பணியினைத் தொடர்ந்தார்.

கடும்போரும் வன்முறைகளும் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் தனது அர்ப்பணிப்பு மிக்க பணிகள் மத்தியிலும் பல மக்கள் அமைப்புக்களின் தலைமை பொறுப்புக்களை ஏற்று சிறப்பான தலைமைத்துவத்தினை வழங்கியவர். எடுத்துக்காட்டாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யாழ் வை.எம்.சி.ஏ., யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் என்பவைகளின் தலைவராக செயற்பட்டு போர் நெருக்கடி மிக்க காலங்களில் சிறப்பான வழிநடத்தலையும் மக்கள் மத்தியில் நம்பிக்கையினையும் கொடுத்தவர். இது மாத்திரமன்றி போர்க்களங்களில் மருத்துவப்பணியாற்ற பல கள மருத்துவர்களை பயிற்சியளித்து உருவாக்கி போர்க்கள உயிர்காப்பு பணிகளை செம்மையாக்கியவர். கடும்போர் நெருக்கடிகள் மத்தியிலும் எம்தேச கட்டுமானத்தின் மைல்கல்லாக தமிழீழ மருத்துவக் கல்லூரியின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்து செயற்பட்டவர். 

1995 ல் இராணுவ ஆக்கிரமிப்பினால் யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வின்போது மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து சென்று வன்னி பெருநிலப்பரப்பில் தனது பணியினைத் தொடர்ந்தார். அக்காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்று பல்வேறு நெருக்கடிகள், சவால்கள் மத்தியில் கால்நடையாகவும் துவிச்சக்கரவண்டியிலும் பயணித்து தனது மனிதநேயப் பணியினை தொடர்ந்தவர்.  அதேவேளை வெண்புறா என்கின்ற செயற்கைக்கால் பொருத்தும் மனிதாபிமான தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளராக பணியேற்று போரின்போது கால்களை இழந்த அனேகருக்கு செயற்கைக்கால் பொருத்த காரணமாக அமைந்தார். போரினால் மிகக்கடுமையாக அழிவடைந்த முல்லைத்தீவு மண்ணில் சிறுவர்களை மகிழ்வூட்ட தனது சொந்த செலவில் மாவீரர் நினைவு பூங்காவை நிறுவி சிறுவர்களுக்கான சிறந்த மகிழ்வூட்டும் பொழுதுபோக்கு களத்தை உருவாக்கியவர். இப்படியாக எம் இனத்திற்காக இவர் ஆற்றிய எண்ணிலடங்காப் பணிகளை எழுதிக்கொண்டே செல்லலாம். 

தனது அறிவை, ஆற்றலை பன்முக ஆளுமையினை தேசவிடுதலைக்காக அர்ப்பணித்து அரும்பாடுபட்டு பணியாற்றிய ஓர் தியாகச்செம்மலை எம் தேசம் இன்று இழந்து நிற்கிறது. தேசவிடுதலை என்கின்ற உயர்ந்த இலட்சியத்துக்காக வாழ்ந்து அதற்காக உழைத்த உன்னதமான மனிதர்களை சாவுகள் ஒருபோதும் காவுகொள்வதில்லை. எம்தேசத்தின் ஆன்மாவிலும் தேசமக்களின் மனங்களிலும் நிரந்தரமாக வாழ்வார்கள். 

இன்று எமது தேசம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான ஆக்கிரமிப்பு சூழ்நிலையில் மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜா போல் ஆயிரம் ஆயிரம் தேசப்பற்றாளர்கள் உருவாக்கினால் தான் எமது தேசத்தினையும் மக்களினையும் மீட்க முடியும் என்பதே நிதர்சனம். மருத்துவர் ஜெயகுலராஜா அவர்களின் மறைவிற்கு இறுதி வணக்கம் செலுத்தும் அதே தருணத்தில், அன்னாரின் சுதந்திர தேச கனவினை நனவாக்க நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம் - என்றுள்ளது .

மறைந்த மருத்துவர் ஜெயக்குலராசாவின் மறைவிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரியக்கம் இரங்கல். மறைந்த மருத்துவர் து.வி.ஜெயக்குலராசா அவர்களின் மறைவிற்க்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரியக்கம் இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளது.அதில்  தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுபெரும் தூண் சரிந்தது மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜாவின் மறைவு தமிழர் தேசத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது ஆத்மார்த்தமான அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்து நிற்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர் அதன் முழு விபரமும் வருமாறுதனது வாழ்நாளில் அதிகமான காலப்பகுதியை தேசவிடுதலைப் பணிக்காக அர்ப்பணித்தவர்.  ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தின் ஆரம்பம் முதலே தன்னை தமிழினத்தின் ஒப்பற்ற உயரிய உன்னத விடுதலைப்பணிக்காக அர்ப்பணித்து தனது தியாகம் நிறைந்த பணியினாலும், போர்க்காலங்களில் மக்கள் துயர்துடைப்பு பணிகளிலும், மருத்துவ சேவையிலும் தன்னை அர்ப்பணித்து பணியாற்றியதன் மூலம் எம்மின மக்களின் உள்ளங்களிலும், எம் தேசத்தலைவரின் இதயத்திலும் நீங்காத இடம்பிடித்தன் மூலம் எம் தேச ஆன்மாவில் நீக்கமற நிலைத்து ஈழத்தமிழர் வரலாற்றில் தனிமனித சரித்திரமாக மிளிர்கின்றார்.இளம் மருத்துவராக ஜெயகுலராஜா அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறையின் உச்சநிலையாக தமிழின ஒடுக்குமுறையின் அடிமைச்சசாசனமான 1972 ல் அன்றைய பேரினவாத அரசினால் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் அரச உத்தியோத்தராக சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து தனது இனமான கொள்கைக்கு முன்பாக தனது தொழிலை துச்சமென நினைத்து தூக்கி எறிந்த இனமான செம்மலாவார்.தாயகத்தில் பேரினவாத ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும் உச்சம் பெற்றிருந்த நிலையில் தனது உயிரைக் கூட ஒரு பொருட்டாக எண்ணாது ஈழத்தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் தனது மருத்துவப்பணியினையும் மனிதநேயப்பணியினையும் மிக அர்ப்பணிப்புடன் வழங்கினார்.  எடுத்துக்காட்டாக 1982 ல் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த போராளிகள் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாது. ஏனென்றால் இராணுத்தினரால் இலகுவாக அடையாளம் காணமுடியும். இவ்வாறான ஆபத்து நிறைந்த சூழலில் அவர்களை தான் பணியாற்றிய திருச்சபை மருத்துவமனையாகிய புத்தூர் புனித லூக்கா மருத்துமனையில் சிகிச்சையளித்து தனது சகோதரர் அருட்தந்தையாக பணியாற்றிய புன்னாலைக்கட்டுவன் நல்லாயன் ஆலயத்தில் பாதுகாத்தார். இதன் விளைவாக இவரும் அவரின் சகோதரர் வணபிதா.ஜெயதிலகராஜாவும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டனர். 1983ல் தமிழினத்துக்கு எதிராக நடந்த அரசபயங்கரவாதத்தின் கொலை வெறியாட்டமான வெலிக்கடை படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பி பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மட்டு சிறையுடைப்பில் சிறை மீண்டு தமிழகம் சென்றார்.தமிழகத்திலும் தனது மானிடநேய மருத்துவப்பணியிலும் மக்கள் துயர்துடைப்பு பணியினையும் தொடர்ந்தார்.  அங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று ஈழஅகதிகள் மத்தியில் அர்ப்பணிப்பு மிக்க பணியாற்றினார். 1987 ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தம்பதிகளுடன் தாயகம் திரும்பி மீண்டும் தாயகத்தில் தனது உயரிய பணியினைத் தொடர்ந்தார்.கடும்போரும் வன்முறைகளும் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் தனது அர்ப்பணிப்பு மிக்க பணிகள் மத்தியிலும் பல மக்கள் அமைப்புக்களின் தலைமை பொறுப்புக்களை ஏற்று சிறப்பான தலைமைத்துவத்தினை வழங்கியவர். எடுத்துக்காட்டாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யாழ் வை.எம்.சி.ஏ., யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் என்பவைகளின் தலைவராக செயற்பட்டு போர் நெருக்கடி மிக்க காலங்களில் சிறப்பான வழிநடத்தலையும் மக்கள் மத்தியில் நம்பிக்கையினையும் கொடுத்தவர். இது மாத்திரமன்றி போர்க்களங்களில் மருத்துவப்பணியாற்ற பல கள மருத்துவர்களை பயிற்சியளித்து உருவாக்கி போர்க்கள உயிர்காப்பு பணிகளை செம்மையாக்கியவர். கடும்போர் நெருக்கடிகள் மத்தியிலும் எம்தேச கட்டுமானத்தின் மைல்கல்லாக தமிழீழ மருத்துவக் கல்லூரியின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்து செயற்பட்டவர். 1995 ல் இராணுவ ஆக்கிரமிப்பினால் யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வின்போது மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து சென்று வன்னி பெருநிலப்பரப்பில் தனது பணியினைத் தொடர்ந்தார். அக்காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்று பல்வேறு நெருக்கடிகள், சவால்கள் மத்தியில் கால்நடையாகவும் துவிச்சக்கரவண்டியிலும் பயணித்து தனது மனிதநேயப் பணியினை தொடர்ந்தவர்.  அதேவேளை வெண்புறா என்கின்ற செயற்கைக்கால் பொருத்தும் மனிதாபிமான தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளராக பணியேற்று போரின்போது கால்களை இழந்த அனேகருக்கு செயற்கைக்கால் பொருத்த காரணமாக அமைந்தார். போரினால் மிகக்கடுமையாக அழிவடைந்த முல்லைத்தீவு மண்ணில் சிறுவர்களை மகிழ்வூட்ட தனது சொந்த செலவில் மாவீரர் நினைவு பூங்காவை நிறுவி சிறுவர்களுக்கான சிறந்த மகிழ்வூட்டும் பொழுதுபோக்கு களத்தை உருவாக்கியவர். இப்படியாக எம் இனத்திற்காக இவர் ஆற்றிய எண்ணிலடங்காப் பணிகளை எழுதிக்கொண்டே செல்லலாம். தனது அறிவை, ஆற்றலை பன்முக ஆளுமையினை தேசவிடுதலைக்காக அர்ப்பணித்து அரும்பாடுபட்டு பணியாற்றிய ஓர் தியாகச்செம்மலை எம் தேசம் இன்று இழந்து நிற்கிறது. தேசவிடுதலை என்கின்ற உயர்ந்த இலட்சியத்துக்காக வாழ்ந்து அதற்காக உழைத்த உன்னதமான மனிதர்களை சாவுகள் ஒருபோதும் காவுகொள்வதில்லை. எம்தேசத்தின் ஆன்மாவிலும் தேசமக்களின் மனங்களிலும் நிரந்தரமாக வாழ்வார்கள். இன்று எமது தேசம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான ஆக்கிரமிப்பு சூழ்நிலையில் மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜா போல் ஆயிரம் ஆயிரம் தேசப்பற்றாளர்கள் உருவாக்கினால் தான் எமது தேசத்தினையும் மக்களினையும் மீட்க முடியும் என்பதே நிதர்சனம். மருத்துவர் ஜெயகுலராஜா அவர்களின் மறைவிற்கு இறுதி வணக்கம் செலுத்தும் அதே தருணத்தில், அன்னாரின் சுதந்திர தேச கனவினை நனவாக்க நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம் - என்றுள்ளது .

Advertisement

Advertisement

Advertisement