• Nov 23 2024

புத்தாண்டிற்கு தயாராகும் இலங்கை மக்கள்! சுகாதார திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை

Chithra / Dec 31st 2023, 2:27 pm
image


புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு நகரில் உள்ள 5 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வகையில் இன்று விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


இதேவேளை, இன்று நள்ளிரவு 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு உதயமாகவுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்குமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களைப் போன்று விபத்துக்களையும் தடுப்பது முக்கியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புத்தாண்டிற்கு தயாராகும் இலங்கை மக்கள் சுகாதார திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கொழும்பு நகரில் உள்ள 5 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வகையில் இன்று விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.இதேவேளை, இன்று நள்ளிரவு 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு உதயமாகவுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்குமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களைப் போன்று விபத்துக்களையும் தடுப்பது முக்கியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement