• Jul 07 2025

கந்தளாயில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

shanuja / Jul 7th 2025, 1:47 pm
image

கந்தளாய் நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன மீனவர் சடலமாக இன்று காலை  மீட்கப்பட்டுள்ளாார். 


கந்தளாய் பலுகஸ் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்  தந்தையான மதுசஞ்சய குமார (வயது 46) என்ற  நபரே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 


குறித்த நபர் நேற்று முன்தினம் தனது இரண்டு நண்பர்களுடன் மீன்பிடிக்கக் கந்தளாய் குளத்தில் படகில் சென்றிருந்தார்.  நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனியாகவே இருந்துள்ளார். பின்னர், மற்ற இருவர் கரைக்கு திரும்பிய நிலையில் மதுசஞ்சய திரும்பவில்லை.


அதனையடுத்து அவரது உறவினர்கள் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.


இதற்கிடையே குறித்த பகுதிக்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், அவரது சடலத்தை பத்திநியம்மான் கோவிலுக்கு பின்னால் கரையோரத்தில்  இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அக்போபுர பொலிஸார்  சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கந்தளாயில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு கந்தளாய் நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன மீனவர் சடலமாக இன்று காலை  மீட்கப்பட்டுள்ளாார். கந்தளாய் பலுகஸ் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்  தந்தையான மதுசஞ்சய குமார (வயது 46) என்ற  நபரே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் தனது இரண்டு நண்பர்களுடன் மீன்பிடிக்கக் கந்தளாய் குளத்தில் படகில் சென்றிருந்தார்.  நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனியாகவே இருந்துள்ளார். பின்னர், மற்ற இருவர் கரைக்கு திரும்பிய நிலையில் மதுசஞ்சய திரும்பவில்லை.அதனையடுத்து அவரது உறவினர்கள் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.இதற்கிடையே குறித்த பகுதிக்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், அவரது சடலத்தை பத்திநியம்மான் கோவிலுக்கு பின்னால் கரையோரத்தில்  இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அக்போபுர பொலிஸார்  சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement