பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசியலில் எவ்வாறான தீர்மானம் எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ள போதிலும் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் போட்டியிட கட்சி என்ற ரீதியில் தயாராக இருக்கிறோம்.ஆனால் பொருளாதார பாதிப்பினால் மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எவ்வாறு அரசியல் தீர்மானத்தை எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு உண்டு.
வரலாற்று காலங்களில் அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் எடுத்த தீர்மானங்களை கொண்டு இந்த அச்சம் தோற்றம் பெற்றுள்ளது.
தேசிய விவசாயத்துறையை மேம்படுத்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மூடிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜே.ஆர்.ஜயவர்தனா தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தார்.
எனவே இடம் பெறவுள்ள தேசிய தேர்தல்களில் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்க போகிறார்கள் என்பது தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் - திஸ்ஸ குட்டியராச்சி அச்சம்.samugammedia பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசியலில் எவ்வாறான தீர்மானம் எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ள போதிலும் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி தெரிவித்தார்.பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் போட்டியிட கட்சி என்ற ரீதியில் தயாராக இருக்கிறோம்.ஆனால் பொருளாதார பாதிப்பினால் மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எவ்வாறு அரசியல் தீர்மானத்தை எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு உண்டு.வரலாற்று காலங்களில் அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் எடுத்த தீர்மானங்களை கொண்டு இந்த அச்சம் தோற்றம் பெற்றுள்ளது.தேசிய விவசாயத்துறையை மேம்படுத்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மூடிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜே.ஆர்.ஜயவர்தனா தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தார்.எனவே இடம் பெறவுள்ள தேசிய தேர்தல்களில் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்க போகிறார்கள் என்பது தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.