• May 23 2026

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி மக்கள்; இரவில் குழந்தைகளுடன் பலர் வீதியில் நிற்கும் அவலம்

Chithra / Oct 4th 2025, 12:36 pm
image


யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மக்கள் பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,  

நேற்று அதிகாலை வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்துள்ளது.

பின்பு பழுதானது திருத்தப்பட்டு மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்து மீண்டும் இடை நடுவே பழுதடைந்துள்ளது.

பின்பு அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது. 

மீண்டும் அதே பேருந்து கேவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது

அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்தது. இதனால் கூடாரப்பு தொடக்கம் கேவில் வரை செல்ல வேவண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

இரவு வேளையில் குழந்தைகளுடன் பலர் வீதியில் இருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது

வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான, வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான ஒரு பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை. 

இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட செய்யுமாறு  வடமராட்ச்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி மக்கள்; இரவில் குழந்தைகளுடன் பலர் வீதியில் நிற்கும் அவலம் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மக்கள் பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,  நேற்று அதிகாலை வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்துள்ளது.பின்பு பழுதானது திருத்தப்பட்டு மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்து மீண்டும் இடை நடுவே பழுதடைந்துள்ளது.பின்பு அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது. மீண்டும் அதே பேருந்து கேவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டதுஅதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்தது. இதனால் கூடாரப்பு தொடக்கம் கேவில் வரை செல்ல வேவண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இரவு வேளையில் குழந்தைகளுடன் பலர் வீதியில் இருப்பதையும் காணக்கூடியதாக இருந்ததுவடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான, வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான ஒரு பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை. இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட செய்யுமாறு  வடமராட்ச்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement