• Feb 12 2026

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான முத்துக்குமாரசுவாமிக்கு மக்கள் அஞ்சலி

dorin / Jan 24th 2026, 8:04 pm
image

ஈழவிடுதலைப் போராட்டங்களில் முன்னோடியாகவும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து அண்மையில் மரணமான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அமெரிக்கமிசன் மண்டபத்தில் கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,கோவிந்தன் கருணாகரம்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் செ.நிலாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி திருமதி செல்வராணி மற்றும் திருகோணமலை மாவட்ட தலைவி தேவி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியினால் எட்டு மாவட்டங்களினால் தயாரிக்கப்பட்ட நினைவு அறிக்கை வாசிக்கப்பட்டதுடன் நினைவு உரைகளும் இடம்பெற்றது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான முத்துக்குமாரசுவாமிக்கு மக்கள் அஞ்சலி ஈழவிடுதலைப் போராட்டங்களில் முன்னோடியாகவும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து அண்மையில் மரணமான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு அமெரிக்கமிசன் மண்டபத்தில் கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,கோவிந்தன் கருணாகரம்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் செ.நிலாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி திருமதி செல்வராணி மற்றும் திருகோணமலை மாவட்ட தலைவி தேவி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.இதன்போது வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியினால் எட்டு மாவட்டங்களினால் தயாரிக்கப்பட்ட நினைவு அறிக்கை வாசிக்கப்பட்டதுடன் நினைவு உரைகளும் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement