• Sep 20 2024

வவுனியா தோணிக்கல் கிராமத்தில் உதவி திட்ட முறைக்கேட்டுக்கெதிராக மக்கள் போராட்டம் - கண்ணீர் மல்கி தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Jun 24th 2023, 8:12 pm
image

Advertisement

வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கிராம மக்கள் இன்று (24.06.2023) மதியம் 3.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் , முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தோணிக்கல் ஜயா சனசமூக நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,



எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 சக வீகிதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்பட்டியல் வந்துள்ளன. 


இதனை கேட்க சென்றால் கிராம சேவையாளர் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையினமாக பதிலளிப்பதுடன் எமது நியயமான கோரிக்கைகளையும் சேவிமடுப்பதில்லை மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மரியாதை இன்மையாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஸ்டப்படுவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மழ்கி தமது தீர்வினை பெற்றுத்தருமாறு தெரிவித்தனர்.

வவுனியா தோணிக்கல் கிராமத்தில் உதவி திட்ட முறைக்கேட்டுக்கெதிராக மக்கள் போராட்டம் - கண்ணீர் மல்கி தெரிவிப்பு samugammedia வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கிராம மக்கள் இன்று (24.06.2023) மதியம் 3.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் , முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தோணிக்கல் ஜயா சனசமூக நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 சக வீகிதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்பட்டியல் வந்துள்ளன. இதனை கேட்க சென்றால் கிராம சேவையாளர் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையினமாக பதிலளிப்பதுடன் எமது நியயமான கோரிக்கைகளையும் சேவிமடுப்பதில்லை மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மரியாதை இன்மையாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஸ்டப்படுவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மழ்கி தமது தீர்வினை பெற்றுத்தருமாறு தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement