• Dec 09 2024

மன்னாரில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம்..!

Sharmi / Sep 30th 2024, 1:56 pm
image

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை உடனடியாக இடமாற்றக் கோரி இன்றைய தினம்(30) காலை 9 மணி முதல் ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் புதிதாக திறக்கப்பட்ட குறித்த மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில்  மக்களின் குடியேற்றம் , இளைஞர் பயிற்சி நிலையம், தையல் தொழிற்சாலை உட்பட பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி குறித்த மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த மாதம் குறித்த பகுதியை சேர்ந்த மக்கள், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, குறித்த மதுபானசாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் என கோரி மன்னார் மாவட்ட செயலாளரிடம் மகஜர் கைளித்ததாகவும், தாங்கள் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் குறித்த மது விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பிரேத பெட்டியுடன் குறித்த பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள், பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ன்றைய தினம் (30) குறித்த மது விற்பனை நிலையம் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் மக்களுடன் கலந்துரையாடினார்.

எனினும் மன்னார்  மாவட்ட செயலாளர் குறித்த பகுதிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை  போராட்டத்தில் ஈடுபட்டர்ள்  முன் வைத்தனர்.

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது மக்கள் தமது பிரச்சினைகளை மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் குறித்த மதுபானசாலையை பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட செயலாளரினால்  உடனடியாக மூட முடியாது என்றும் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் ஊடாக வே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும்,இவ்விடயம் குறித்து உடனடியாக மதுவரி திணைக்கள ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும்,குறிப்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து குறித்த மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், குறிப்பாக தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பு காணப்படுகின்ற நிலையில் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள விடயத்தை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலாளரின் வாக்குறுதிக்கு அமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை கை விட்டுச் சென்றனர்.


மன்னாரில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம். மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை உடனடியாக இடமாற்றக் கோரி இன்றைய தினம்(30) காலை 9 மணி முதல் ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த போராட்டம் புதிதாக திறக்கப்பட்ட குறித்த மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில்  மக்களின் குடியேற்றம் , இளைஞர் பயிற்சி நிலையம், தையல் தொழிற்சாலை உட்பட பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி குறித்த மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.கடந்த மாதம் குறித்த பகுதியை சேர்ந்த மக்கள், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, குறித்த மதுபானசாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் என கோரி மன்னார் மாவட்ட செயலாளரிடம் மகஜர் கையளித்ததாகவும், தாங்கள் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் குறித்த மது விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.பிரேத பெட்டியுடன் குறித்த பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள், பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்றைய தினம் (30) குறித்த மது விற்பனை நிலையம் திறக்கப்படவில்லை.இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் மக்களுடன் கலந்துரையாடினார்.எனினும் மன்னார்  மாவட்ட செயலாளர் குறித்த பகுதிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  முன் வைத்தனர்.மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினார்.இதன் போது மக்கள் தமது பிரச்சினைகளை மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில் குறித்த மதுபானசாலையை பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட செயலாளரினால்  உடனடியாக மூட முடியாது என்றும் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் ஊடாக வே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும்,இவ்விடயம் குறித்து உடனடியாக மதுவரி திணைக்கள ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும்,குறிப்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து குறித்த மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், குறிப்பாக தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பு காணப்படுகின்ற நிலையில் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள விடயத்தை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.இந்த நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலாளரின் வாக்குறுதிக்கு அமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை கை விட்டுச் சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement