• Dec 09 2024

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது..!

Sharmi / Sep 30th 2024, 1:39 pm
image

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவில்  கடந்த வெள்ளிக்கிழமை(27) மாலை இரகசிய தகவல் ஒன்றினை தொடர்ந்து வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் மற்றும் சான்றுப்பொருட்களை  மீட்டு  இறக்காமம்   பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.

இவ்வாறு கைதானவர் வரப்பத்தான்சேனை 02 வண்டிக்காரன் வீதி பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை என்பதுடன்  43 வயது மதிக்கத்தக்கவராவார். 

சந்தேக நபர்  வசம் இருந்து 5 கிராம்  650  மில்லி கிராம்  ஐஸ் போதைப்பொருள்  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனையில் பல நாட்களாக ஈடுபட்டவர் என விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது. 

மேலும்,இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலய கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.


அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது. ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவில்  கடந்த வெள்ளிக்கிழமை(27) மாலை இரகசிய தகவல் ஒன்றினை தொடர்ந்து வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் மற்றும் சான்றுப்பொருட்களை  மீட்டு  இறக்காமம்   பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.இவ்வாறு கைதானவர் வரப்பத்தான்சேனை 02 வண்டிக்காரன் வீதி பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை என்பதுடன்  43 வயது மதிக்கத்தக்கவராவார். சந்தேக நபர்  வசம் இருந்து 5 கிராம்  650  மில்லி கிராம்  ஐஸ் போதைப்பொருள்  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனையில் பல நாட்களாக ஈடுபட்டவர் என விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது. மேலும்,இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலய கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement