• Apr 30 2025

மட்டக்களப்பில் நகைவாங்க முண்டியடித்த மக்கள்

Chithra / Apr 30th 2025, 3:09 pm
image


அட்சய திருதியை நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள  நகை விற்பனை நிலையங்களுக்கும் மக்கள் வருகை தந்து தமக்கு வேண்டிய நகை கொள்வனவில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இன்று காலையிலேயே சகல நகைக்கடைகளும் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு கும்ப வழிபாடுகள் இடம் பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.

இன்றைய விசேட நாளில் நகை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விசேட பரிசில்களும் இதன்போது நகைக்கடை உரிமையாளர்களால் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலுமிருந்து மக்கள் இதன்போது மட்டு நகருக்குச் சென்று தமக்கு வேண்டிய நகைகளை கொள்வனவு செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.


மட்டக்களப்பில் நகைவாங்க முண்டியடித்த மக்கள் அட்சய திருதியை நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள  நகை விற்பனை நிலையங்களுக்கும் மக்கள் வருகை தந்து தமக்கு வேண்டிய நகை கொள்வனவில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலையிலேயே சகல நகைக்கடைகளும் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு கும்ப வழிபாடுகள் இடம் பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.இன்றைய விசேட நாளில் நகை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விசேட பரிசில்களும் இதன்போது நகைக்கடை உரிமையாளர்களால் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலுமிருந்து மக்கள் இதன்போது மட்டு நகருக்குச் சென்று தமக்கு வேண்டிய நகைகளை கொள்வனவு செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement