நுவரெலியாவில் சிறு குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் பண மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தந்தை, தம்பனை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் குழந்தையின் படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பண நன்கொடைக்கான தொடர்புத் தகவலாக அவர்கள் தங்கள் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
குறித்த சந்தேகநபர்கள் நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 25 மற்றும் 34 வயதுடையவர்கள் என்பதுடன் சந்தேக நபர்கள் மிதிகம மற்றும் அஹங்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 10,900 ரூபா மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்களே உசார். குழந்தையை வைத்து பணமோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது.samugammedia நுவரெலியாவில் சிறு குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் பண மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குழந்தையின் தந்தை, தம்பனை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் குழந்தையின் படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பண நன்கொடைக்கான தொடர்புத் தகவலாக அவர்கள் தங்கள் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.குறித்த சந்தேகநபர்கள் நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 25 மற்றும் 34 வயதுடையவர்கள் என்பதுடன் சந்தேக நபர்கள் மிதிகம மற்றும் அஹங்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 10,900 ரூபா மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.