• Sep 20 2024

கூட்டமைப்பிற்கே மக்கள் வாக்களித்தனர்- மயூரன் காட்டம்!

Tamil nila / Jan 19th 2023, 6:56 pm
image

Advertisement

சின்னத்திற்கு மாத்திரம் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே மக்கள் வாக்களித்தனர் என்பதனை தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ. மயூரன் தெரிவித்தார்.


எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.


அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,


தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆகிய நாம் இன்று கட்டுப்பணத்தினை செலுத்தியிருக்கின்றோம். இதுவரை காலம் வேறு சின்னத்தில் போட்டியிட்ட நாங்கள் இம்முறை குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். கடந்த காலங்களில் தமிழர் விடுதலை கூட்டணியானது உதயசூரியன் சின்னத்தினை தமதாக்கி வெளியே சென்றிருந்தனர்.  அதேபோல தற்போது தமிழ் கூட்டமைப்பில் இருந்து வீட்டுச்சின்னத்தினை தமிழரசுக்கட்சியினர் எடுத்து சென்றுள்ளனர். 


இந்தநிலையில் நாங்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கின்றோம். கடந்த காலங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது அந்த சின்னத்திற்கே மக்களிடம் செல்வாக்கு உள்ளது எனவே தனித்து போட்டியிட்டால் அதிகளவான ஆசனங்களை பெறமுடியும் என்று அனைவரும் நினைத்தனர், அந்த  விபரீதமான முடிவை தமிழர் விடுதலைக்கூட்டணி எடுத்து வரலாற்று பிழையை ஏற்படுத்தியிருந்தது. 


அதே போல சின்னத்திற்கும் தங்களிற்கும் தான் வாக்களிக்கின்றார்கள் என்ற பிழையான முடிவினை தமிழசுக்கட்சியினர் இன்று எடுத்துள்ளனர். ஆனால் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே தமது வாக்குகளினை வழங்கியுள்ளார்கள் என்பதினை இந்த தேர்தல் நிரூபிக்கும். தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பானது தமிழரசுகட்சியின் பிளவினால் ஒருபோதும் பின்னடைவை சந்திக்காது.  


அதேபோல வடகிழக்கு மாகாணங்களில் குத்துவிளக்கு சின்னத்திலே போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அதிகமான சபைகளை கைப்பற்றுவோம் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம். 


தமிழரசுக்கட்சி செய்த வரலாற்று பிழையினை எமது வெற்றியானது புலப்படுத்தும்.அதனை  உணர்ந்து மீண்டும் அவர்கள் இணைவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தலை நாம் சந்திக்க தயாராகியிருக்கிறோம் என்றார்.

கூட்டமைப்பிற்கே மக்கள் வாக்களித்தனர்- மயூரன் காட்டம் சின்னத்திற்கு மாத்திரம் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே மக்கள் வாக்களித்தனர் என்பதனை தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ. மயூரன் தெரிவித்தார்.எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆகிய நாம் இன்று கட்டுப்பணத்தினை செலுத்தியிருக்கின்றோம். இதுவரை காலம் வேறு சின்னத்தில் போட்டியிட்ட நாங்கள் இம்முறை குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். கடந்த காலங்களில் தமிழர் விடுதலை கூட்டணியானது உதயசூரியன் சின்னத்தினை தமதாக்கி வெளியே சென்றிருந்தனர்.  அதேபோல தற்போது தமிழ் கூட்டமைப்பில் இருந்து வீட்டுச்சின்னத்தினை தமிழரசுக்கட்சியினர் எடுத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் நாங்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கின்றோம். கடந்த காலங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது அந்த சின்னத்திற்கே மக்களிடம் செல்வாக்கு உள்ளது எனவே தனித்து போட்டியிட்டால் அதிகளவான ஆசனங்களை பெறமுடியும் என்று அனைவரும் நினைத்தனர், அந்த  விபரீதமான முடிவை தமிழர் விடுதலைக்கூட்டணி எடுத்து வரலாற்று பிழையை ஏற்படுத்தியிருந்தது. அதே போல சின்னத்திற்கும் தங்களிற்கும் தான் வாக்களிக்கின்றார்கள் என்ற பிழையான முடிவினை தமிழசுக்கட்சியினர் இன்று எடுத்துள்ளனர். ஆனால் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே தமது வாக்குகளினை வழங்கியுள்ளார்கள் என்பதினை இந்த தேர்தல் நிரூபிக்கும். தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பானது தமிழரசுகட்சியின் பிளவினால் ஒருபோதும் பின்னடைவை சந்திக்காது.  அதேபோல வடகிழக்கு மாகாணங்களில் குத்துவிளக்கு சின்னத்திலே போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அதிகமான சபைகளை கைப்பற்றுவோம் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம். தமிழரசுக்கட்சி செய்த வரலாற்று பிழையினை எமது வெற்றியானது புலப்படுத்தும்.அதனை  உணர்ந்து மீண்டும் அவர்கள் இணைவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தலை நாம் சந்திக்க தயாராகியிருக்கிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement