நாட்டைப் புரட்டிப் போட்ட டிட்வா புயலின் கோரத்தால் நாடு முழுவதும் பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள், காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளை இழந்தவர்கள் என பாதிப்புக்கள் எண்ணில் அடங்காதவை.
புயலின் கோரம் ஓய்ந்து மக்கள் இயல்புநிலைக்கு மெல்ல மெல்ல திரும்பிக்கொண்டுள்ளனர். இதில் பலரது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்துள்ளன.
வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளைப் பார்க்கவும் தமது பொருள்கள் ஏதேனும் உள்ளதா என்று அவதானிக்கவும் சிலர் தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
புயல் கடந்தும் வீடுகளில் உள்ள வெள்ளநீர் அப்படியே உள்ளது. பொருள்களும் சேற்றில் புதைந்துள்ளன. சேற்றில் புதைந்த பொருள்களை அவர்கள் கவலையுடன் எடுக்கும் அவல காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன.
வெள்ளத்தில் தத்தளித்த வீடுகளை பார்க்கச் சென்ற நபர்கள் -சேற்றில் புதைந்த பொருள்களை எடுக்கும் அவலக் காட்சி நாட்டைப் புரட்டிப் போட்ட டிட்வா புயலின் கோரத்தால் நாடு முழுவதும் பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள், காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளை இழந்தவர்கள் என பாதிப்புக்கள் எண்ணில் அடங்காதவை. புயலின் கோரம் ஓய்ந்து மக்கள் இயல்புநிலைக்கு மெல்ல மெல்ல திரும்பிக்கொண்டுள்ளனர். இதில் பலரது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்துள்ளன.வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளைப் பார்க்கவும் தமது பொருள்கள் ஏதேனும் உள்ளதா என்று அவதானிக்கவும் சிலர் தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். புயல் கடந்தும் வீடுகளில் உள்ள வெள்ளநீர் அப்படியே உள்ளது. பொருள்களும் சேற்றில் புதைந்துள்ளன. சேற்றில் புதைந்த பொருள்களை அவர்கள் கவலையுடன் எடுக்கும் அவல காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன.