• Jan 13 2026

முன்கூட்டிய எச்சரிக்கை இல்லாததாலே பேரழிவு; உடல்களை நாங்களே மீட்டோம் - கண்டி மக்களின் அவலம்!

shanuja / Dec 4th 2025, 2:48 pm
image

முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்படாததே இந்தப் பேரழிவிற்குக் காரணம் என்று  கண்டிப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 


டிட்வா புயலின் கோரத்தால் கண்டியில் பல மண்சரிவுகள் ஏற்பட்டன. அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அப்பகுதியினர் மீட்டனர். 


கண்டியில் உள்ள கம்போலா நகரில் புயல் ஏற்படுத்திய கடுமையான சேதங்களை காணொளியில் பதிவிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளனர். 


மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தாமாகவே  மீட்டுக்கொண்டதாகவும், உடனடித் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தபட்ச உதவியைப் பெற்றதாகவும்  தெரிவித்துள்ளனர்.


அங்கு ஏற்பட்ட அழிவுகளைப் பதிவு செய்து வெளியிட்டு பேரழிவின் அளவிற்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.

முன்கூட்டிய எச்சரிக்கை இல்லாததாலே பேரழிவு; உடல்களை நாங்களே மீட்டோம் - கண்டி மக்களின் அவலம் முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்படாததே இந்தப் பேரழிவிற்குக் காரணம் என்று  கண்டிப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். டிட்வா புயலின் கோரத்தால் கண்டியில் பல மண்சரிவுகள் ஏற்பட்டன. அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அப்பகுதியினர் மீட்டனர். கண்டியில் உள்ள கம்போலா நகரில் புயல் ஏற்படுத்திய கடுமையான சேதங்களை காணொளியில் பதிவிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளனர். மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தாமாகவே  மீட்டுக்கொண்டதாகவும், உடனடித் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தபட்ச உதவியைப் பெற்றதாகவும்  தெரிவித்துள்ளனர்.அங்கு ஏற்பட்ட அழிவுகளைப் பதிவு செய்து வெளியிட்டு பேரழிவின் அளவிற்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement