நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் தைப் பொங்கல் தினத்தன்று ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.
நமிபியாவின் விண்ட்ஹோக், யுனைட்டட் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர்களான திமன்த மஹாவித்தான, விரான் சமுதித்த ஆகிய இருவரும் 121 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்களை இழந்தது. (49 - 4 விக்.) இந் நிலையில் கவிஜ கமகே, சாமிக்க ஹீனட்டிகல ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர்.
திமன்த மஹாவித்தான 87 ஓட்டங்களையும் விரான் சமுதித்த 45 ஓட்டங்களையும் உப அணித் தலைவர் கவிஜ கமகே 48 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல 14 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 10 ஓட்டங்களை எட்டவில்லை.
226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 34 ஓவர்களில் 176 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.
தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
பந்துவீச்சில் குகதாஸ் மாதுளன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விரான் சமுதித்த 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மலின்த சில்வா 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கொழும்பு வெஸ்லி கல்லூரி வீரர் ஸ்ரீராம் ஜீவகன் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
துடுப்பாட்டத்தில் 11 வீரர்களும் பந்துவீச்சில் 11 வீரர்களும் பயன்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் விளையாடவில்லை.
இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி இதே மைதானத்தில் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. அப் போட்டியில் ஆகாஷுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் சுற்று போட்டிளை நமிபியாவில் விiளாடவுள்ளது.
ஜப்பனை 17ஆம் திகதியும் அயர்லாந்தை 19ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 23ஆம் திகதியும் எதிர்த்தாடவுள்ள இலங்கை சுப்ப 6 சுற்றில் விளையாட தகுதிபெறும் என நம்பப்படுகிறது.
இலங்கை இளையோர் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன கருதப்படுகின்றார்.
தென் ஆபிரிக்காவுடனான உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றி நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் தைப் பொங்கல் தினத்தன்று ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.நமிபியாவின் விண்ட்ஹோக், யுனைட்டட் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது.ஆரம்ப வீரர்களான திமன்த மஹாவித்தான, விரான் சமுதித்த ஆகிய இருவரும் 121 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.அதன் பின்னர் சீரான இடைவெளியில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்களை இழந்தது. (49 - 4 விக்.) இந் நிலையில் கவிஜ கமகே, சாமிக்க ஹீனட்டிகல ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர்.திமன்த மஹாவித்தான 87 ஓட்டங்களையும் விரான் சமுதித்த 45 ஓட்டங்களையும் உப அணித் தலைவர் கவிஜ கமகே 48 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல 14 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 10 ஓட்டங்களை எட்டவில்லை.226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 34 ஓவர்களில் 176 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.பந்துவீச்சில் குகதாஸ் மாதுளன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விரான் சமுதித்த 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மலின்த சில்வா 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கொழும்பு வெஸ்லி கல்லூரி வீரர் ஸ்ரீராம் ஜீவகன் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.துடுப்பாட்டத்தில் 11 வீரர்களும் பந்துவீச்சில் 11 வீரர்களும் பயன்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் விளையாடவில்லை.இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி இதே மைதானத்தில் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. அப் போட்டியில் ஆகாஷுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் சுற்று போட்டிளை நமிபியாவில் விiளாடவுள்ளது.ஜப்பனை 17ஆம் திகதியும் அயர்லாந்தை 19ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 23ஆம் திகதியும் எதிர்த்தாடவுள்ள இலங்கை சுப்ப 6 சுற்றில் விளையாட தகுதிபெறும் என நம்பப்படுகிறது.இலங்கை இளையோர் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன கருதப்படுகின்றார்.ஐசிசியினால் பெயரிடப்பட்டுள்ள கவனிக்கத்த வீரர்களில் செத்மிக்க செனவிரட்னவும் ஒருவராவார்.பத்து இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள செத்மிக்க 16 விக்கெட்களைக் கைபற்றியுள்ளார். 19 வயதின்கீழ் இலங்கை குழாம்விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். செர்வேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி)