• Jan 13 2026

இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் மரணம் - யாழில் துயரம்

Chithra / Jan 13th 2026, 9:14 am
image


இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 


பாடசாலை வீதி, சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மணிமாறன் லதா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில், இதயம் செயலிழப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் மரணம் - யாழில் துயரம் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வீதி, சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மணிமாறன் லதா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில், இதயம் செயலிழப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement