• Jan 13 2026

கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கிய உற்ற நண்பர்கள்; பறிபோன நான்கு உயிர்கள்

Chithra / Jan 13th 2026, 8:10 am
image


கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் நேற்று (12) பிற்பகல் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். 


மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 


விபத்தின் போது காருக்குள் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 


குறித்த சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பொன்னையா பூபாலன், 34 வயதுடைய சந்திரகுமார் சவேந்திரன், புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குனதர்ஷன், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவானி பிரசாத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


இவர்களில் மூவர் விசுவமடு மகா வித்தியாலயத்தில் ஒன்றாக கல்வி கற்று கிளிநொச்சியில் ஒன்றாக தொழில் புரிந்த உற்ற நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கிய உற்ற நண்பர்கள்; பறிபோன நான்கு உயிர்கள் கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் நேற்று (12) பிற்பகல் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது காருக்குள் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பொன்னையா பூபாலன், 34 வயதுடைய சந்திரகுமார் சவேந்திரன், புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குனதர்ஷன், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவானி பிரசாத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் மூவர் விசுவமடு மகா வித்தியாலயத்தில் ஒன்றாக கல்வி கற்று கிளிநொச்சியில் ஒன்றாக தொழில் புரிந்த உற்ற நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement