பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அமைச்சரவைத் திருத்தம் செய்யுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், பிரதமர் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள சர்ச்சைக்குரிய கல்வி மறுசீரமைப்பினூடாக அரசாங்கத்தின் கீழ் நாடு, மக்கள், புத்த சாசனம் என்பன பாரதூரமான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்பது உறுதியாகத் தெரிகிறது.
இதுபோன்ற பலவீன செயற்பாடுகள் மற்றும் மக்கள், நாடு தொடர்பில் முற்போக்கு சிந்தனையில்லாமல் அரசாங்கமொன்றின் நேரடி பாதிப்புகள் நாட்டையும் மக்களையுமே சாரும் என்பது திருத்தங்களில் தெரியவருகிறது. கல்வி மறுசீரமைப்புக்காக பிக்குகள், ஏனைய மதத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணர்களின் நிலைப்பாடுகளை பெற்றுக்கொள்ளாமையானது அதன் வெளிப்படைத் தன்மை இல்லாமல் போயுள்ளது.
பிக்குகளின் வரலாற்று உரிமைகளை நிறைவேற்றி நாட்டையும் மக்களையும் புத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்கு அரச தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விரைவாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரை பதவியிலிருந்து நீக்கி விரைவில் அமைச்சரவையை திருத்தம் செய்யுங்கள் - எல்லே குணவங்ச தேரர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அமைச்சரவைத் திருத்தம் செய்யுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைத்து கோரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், பிரதமர் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள சர்ச்சைக்குரிய கல்வி மறுசீரமைப்பினூடாக அரசாங்கத்தின் கீழ் நாடு, மக்கள், புத்த சாசனம் என்பன பாரதூரமான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்பது உறுதியாகத் தெரிகிறது.இதுபோன்ற பலவீன செயற்பாடுகள் மற்றும் மக்கள், நாடு தொடர்பில் முற்போக்கு சிந்தனையில்லாமல் அரசாங்கமொன்றின் நேரடி பாதிப்புகள் நாட்டையும் மக்களையுமே சாரும் என்பது திருத்தங்களில் தெரியவருகிறது. கல்வி மறுசீரமைப்புக்காக பிக்குகள், ஏனைய மதத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணர்களின் நிலைப்பாடுகளை பெற்றுக்கொள்ளாமையானது அதன் வெளிப்படைத் தன்மை இல்லாமல் போயுள்ளது.பிக்குகளின் வரலாற்று உரிமைகளை நிறைவேற்றி நாட்டையும் மக்களையும் புத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்கு அரச தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விரைவாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.