• Feb 16 2026

மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வீட்டுக்கு கல்வீச்சு; சிசிரிவியில் சிக்கிய திசைகாட்டி ஆதரவாளர்!

Chithra / Jan 13th 2026, 12:46 pm
image

 

கம்பஹா பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான அனுஜா ஷ்ரியந்தியின் வீடு மற்றும் கடை மீது இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


வெலிவேரி அம்பரலுவ பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


பிரதேச சபை உறுப்பினரான அனுஜா, வெலிவேரி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைதுசெய்யப்பட்டவர், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு அவர் தாக்குதல் நடத்திய போது மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த சந்தேக நபர் வீடு மற்றும் அதனுடன் இணைந்துள்ள வணிக நிறுவனத்தின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வீட்டுக்கு கல்வீச்சு; சிசிரிவியில் சிக்கிய திசைகாட்டி ஆதரவாளர்  கம்பஹா பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான அனுஜா ஷ்ரியந்தியின் வீடு மற்றும் கடை மீது இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெலிவேரி அம்பரலுவ பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேச சபை உறுப்பினரான அனுஜா, வெலிவேரி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு அவர் தாக்குதல் நடத்திய போது மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சந்தேக நபர் வீடு மற்றும் அதனுடன் இணைந்துள்ள வணிக நிறுவனத்தின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement