• Jan 13 2026

மட்டக்களப்பில் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்பு

Chithra / Jan 13th 2026, 9:45 am
image

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் முதியவர்களான கணவனும் மனைவியும் நேற்று இரவு, அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.  


தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், அவரது 73 வயதுடையுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


சம்பவத்தில் உயிரிழந்த மூதாட்டி, தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதனையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்தில்  விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதையடுத்து, சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இவர்கள் இருவரும் விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் இவர்களின் மரணம் அப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பில் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்பு மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் முதியவர்களான கணவனும் மனைவியும் நேற்று இரவு, அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.  தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், அவரது 73 வயதுடையுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்த மூதாட்டி, தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்தில்  விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதையடுத்து, சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இவர்கள் இருவரும் விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இவர்களின் மரணம் அப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement