• Jan 13 2026

பிரதமர் ஹரிணியே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி!

shanuja / Jan 13th 2026, 9:50 am
image

“பிரதமர் ஹரிணி அமரசூரியவே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி. அவரே தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளில் பிரதான கடமையைச் செய்தார். அதன் காரணமாகவே அவர் இன்று பிரதிவாதிகளின் பிரதான இலக்காக மாறியுள்ளார்” என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 


விசேட தலையீடு செய்த பிரதமர் என்பது தற்போதைய அரசியலில் இருக்கும் பிரபல அரசியல் கதாபாத்திரமாவார். குறிப்பாக எதிர்கால அரசியல் பயணத்தை எடுத்துக்கொண்டால் அவரே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி. தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளில் பிரதான கடமையை செய்தார். அதன் காரணமாகவே அவர் இன்று பிரதிவாதிகளின் பிரதான இலக்காகவும் மாறியுள்ளார்.


கல்வி மறுசீரமைப்பு என்ற போர்வையில் சூழ்ச்சி செய்து தோற்கடிப்பதற்கு எதிர்பார்க்கிறார்கள். கல்வி மறுசீரமைப்பு என்பது எமது நாட்டுக்கு அத்தியாவசியமானதாகும். எனவே, அதனூடாக அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தி, அரசாங்கத்தை தோற்கடித்து கல்வி மறுசீரமைப்பையும் வீணடித்து மறுசீரமைப்பில் ஏற்படப்போகும் மாற்றங்களையும் முயற்சிக்கும் தரப்பினர் இருக்கிறார்கள்.


நிலைப்பாட்டு அரசியலிலும் நடைமுறை அரசியலிலும் மோத முடியாதவர்களே இன்று தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதமருக்கு சேறு பூச முயற்சிக்கிறார்கள்’’ என்றார்.

பிரதமர் ஹரிணியே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி “பிரதமர் ஹரிணி அமரசூரியவே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி. அவரே தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளில் பிரதான கடமையைச் செய்தார். அதன் காரணமாகவே அவர் இன்று பிரதிவாதிகளின் பிரதான இலக்காக மாறியுள்ளார்” என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், விசேட தலையீடு செய்த பிரதமர் என்பது தற்போதைய அரசியலில் இருக்கும் பிரபல அரசியல் கதாபாத்திரமாவார். குறிப்பாக எதிர்கால அரசியல் பயணத்தை எடுத்துக்கொண்டால் அவரே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி. தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளில் பிரதான கடமையை செய்தார். அதன் காரணமாகவே அவர் இன்று பிரதிவாதிகளின் பிரதான இலக்காகவும் மாறியுள்ளார்.கல்வி மறுசீரமைப்பு என்ற போர்வையில் சூழ்ச்சி செய்து தோற்கடிப்பதற்கு எதிர்பார்க்கிறார்கள். கல்வி மறுசீரமைப்பு என்பது எமது நாட்டுக்கு அத்தியாவசியமானதாகும். எனவே, அதனூடாக அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தி, அரசாங்கத்தை தோற்கடித்து கல்வி மறுசீரமைப்பையும் வீணடித்து மறுசீரமைப்பில் ஏற்படப்போகும் மாற்றங்களையும் முயற்சிக்கும் தரப்பினர் இருக்கிறார்கள்.நிலைப்பாட்டு அரசியலிலும் நடைமுறை அரசியலிலும் மோத முடியாதவர்களே இன்று தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதமருக்கு சேறு பூச முயற்சிக்கிறார்கள்’’ என்றார்.

Advertisement

Advertisement

Advertisement