• Jan 13 2026

நெல் விலையை அதிகரிக்க அரசு நடவடிக்கை! அரிசி விலையும் உயருமா?

Chithra / Jan 13th 2026, 9:26 am
image


எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 


சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். 


எவ்வாறாயினும், அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


குறிப்பாக நாடு நெல் 120 ரூபாவாகவே நீடிக்கும். சம்பா நெல்லின் விலை 125 ரூபாவிலிருந்து 130 ரூபா வரை அதிகரிக்கப்படும். விவசாயிகளின் தரப்பைப் பொறுத்தவரை கீரி சம்பா 132 ரூபாவிலிருந்து 140 ரூபா வரை அதிகரிக்கப்படும். 


ஏனைய ஆண்டுகளில் நாட்டில் அரிசி மாஃபியா செயற்பட்ட போதிலும், இந்த ஆண்டு அது இடம்பெறவில்லை எனவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.

நெல் விலையை அதிகரிக்க அரசு நடவடிக்கை அரிசி விலையும் உயருமா எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். எவ்வாறாயினும், அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக நாடு நெல் 120 ரூபாவாகவே நீடிக்கும். சம்பா நெல்லின் விலை 125 ரூபாவிலிருந்து 130 ரூபா வரை அதிகரிக்கப்படும். விவசாயிகளின் தரப்பைப் பொறுத்தவரை கீரி சம்பா 132 ரூபாவிலிருந்து 140 ரூபா வரை அதிகரிக்கப்படும். ஏனைய ஆண்டுகளில் நாட்டில் அரிசி மாஃபியா செயற்பட்ட போதிலும், இந்த ஆண்டு அது இடம்பெறவில்லை எனவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement