• Apr 03 2025

கொடுப்பனவுகளுக்காக வாக்களித்தால் கடந்த ஆண்டைப் போன்று மக்கள் அனைத்தையும் இழக்க நேரிடும்..! - பொன்சேகா எச்சரிக்கை

Chithra / Jan 1st 2024, 9:04 am
image

 


நாட்டை கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு தேர்தலுக்கான ஆண்டாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான மோசடிக்காரர்களான அரசியல்வாதிகளிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊழல், மோசடியற்ற நாட்டை நேசிக்கும் தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

நிவாரணங்களுக்காகவும், சமூர்த்தி கொடுப்பனவுகளுக்காகவும் வாக்களித்தால் கடந்த ஆண்டைப் போன்று மீண்டும் அனைத்தையும் இழக்க நேரிடும்.

இவ்வருடம் அரசியலமைப்புக்கேற்ப அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும். 

ஆனால் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். 

அவ்வாறில்லை எனினும் மீண்டும் மக்கள் ஏமாற்றப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

கொடுப்பனவுகளுக்காக வாக்களித்தால் கடந்த ஆண்டைப் போன்று மக்கள் அனைத்தையும் இழக்க நேரிடும். - பொன்சேகா எச்சரிக்கை  நாட்டை கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு தேர்தலுக்கான ஆண்டாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.மேலும் இவ்வாறான மோசடிக்காரர்களான அரசியல்வாதிகளிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஊழல், மோசடியற்ற நாட்டை நேசிக்கும் தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.நிவாரணங்களுக்காகவும், சமூர்த்தி கொடுப்பனவுகளுக்காகவும் வாக்களித்தால் கடந்த ஆண்டைப் போன்று மீண்டும் அனைத்தையும் இழக்க நேரிடும்.இவ்வருடம் அரசியலமைப்புக்கேற்ப அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும். ஆனால் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை எனினும் மீண்டும் மக்கள் ஏமாற்றப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement