திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை தலைவருமான சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வும், மக்கள் சந்திப்பும் மூதூர் பட்டித்திடல் பகுதியில் இன்று(07) மாலை இடம்பெற்றது.
இதன்போது மூதூர் பட்டித்திடல் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு குகதாசன் சென்று வழிபாட்டிலும் ஈடுபட்டார்.
நிகழ்வின் போது சண்முகம் குகதாசன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சண்முகம் குகதாசன் கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 41,000 ஏக்கர் காணிகளை வனவிலாக்கா திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாகவும், துறைமுக அதிகார சபை காணிகளை கையகப்படுத்த முனைவதாகவும் சுட்டிக்காட்டினார்.அத்தோடு விகாரைகள் அமைப்பதற்கு முனைவதாகவும் தெரிவித்தார்.
உரிமைப் பிரச்சினை அபிவிருத்தி பிரச்சினை.இதில் உரிமை தான் முக்கியத்துவம் என குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினராகி 7 வாரங்களில் ஐந்து கோடிக்கு மேல் அபிவிருத்தி பணிகளை திருகோணமலை மாவட்டத்தில் செய்துள்ளேன்.
யாருக்கும் விலை போகாது அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்.
நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்கின்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து உள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
மூதூரில் இடம்பெற்ற குகதாசன் எம்.பியின் மக்கள் சந்திப்பு. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை தலைவருமான சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வும், மக்கள் சந்திப்பும் மூதூர் பட்டித்திடல் பகுதியில் இன்று(07) மாலை இடம்பெற்றது.இதன்போது மூதூர் பட்டித்திடல் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு குகதாசன் சென்று வழிபாட்டிலும் ஈடுபட்டார்.நிகழ்வின் போது சண்முகம் குகதாசன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சண்முகம் குகதாசன் கருத்து தெரிவிக்கையில்,திருகோணமலை மாவட்டத்திலுள்ள 41,000 ஏக்கர் காணிகளை வனவிலாக்கா திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாகவும், துறைமுக அதிகார சபை காணிகளை கையகப்படுத்த முனைவதாகவும் சுட்டிக்காட்டினார்.அத்தோடு விகாரைகள் அமைப்பதற்கு முனைவதாகவும் தெரிவித்தார்.உரிமைப் பிரச்சினை அபிவிருத்தி பிரச்சினை.இதில் உரிமை தான் முக்கியத்துவம் என குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினராகி 7 வாரங்களில் ஐந்து கோடிக்கு மேல் அபிவிருத்தி பணிகளை திருகோணமலை மாவட்டத்தில் செய்துள்ளேன்.யாருக்கும் விலை போகாது அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றேன். நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்கின்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து உள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.