• Oct 09 2024

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.செம்மணி படுகொலை நினைவேந்தல்..!

Sharmi / Sep 7th 2024, 10:51 pm
image

Advertisement

யாழ்.செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்ட செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து நினைவேந்தல் இன்றையதினம்(07) அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் இன்றையதினம் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. 

இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்குகொண்டனர்.




தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.செம்மணி படுகொலை நினைவேந்தல். யாழ்.செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்ட செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து நினைவேந்தல் இன்றையதினம்(07) அனுஷ்டிக்கப்பட்டது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் இன்றையதினம் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்குகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement