• Nov 28 2024

ஆளுமை உள்ளவர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் - எஹியா வேண்டுகோள்..!

Sharmi / Oct 14th 2024, 10:56 am
image

மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய திறமையானவர்களை புத்தளம் மக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த, வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஆப்தீன் எஹியா, வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக கட்சி ஊடாக புத்தளம் மாவட்டத்தில் பிரித்தாலும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனவும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் முதலாவது ஊடக ஊடக சந்திப்பு நேற்று (13) மாலை மதுரங்குளி - கடையாமோட்டையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் உப தலைவர் ஸப்வான் சல்மான் , கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.என்.எம்.ரினோஸ் உட்பட கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான பி.ஏ. நிமல் பமுனு ஆராச்சி (புத்தளம் பிரதேச சபை முன்னாள் தலைவர்), எம்.கே.எம்.ஆதிர் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்), ஏ.ஆர்.எம்.ஜெஸீல் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்), எச்.சம்சீர், ஏ.டபிள்யூ.எஸ். அர்ஷத், என்.எம்.எம்.முயீன் ஜே.பி, எச்.எச்.எம்.நளீம், எஸ்.எம்.ரம்சான், எம்.எப்.எம். சப்ராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஆப்தீன் எஹியா மேலும் தெரிவிக்கையில்,

புத்தளம் மாவட்ட மக்களின் அரசியல் அதிகாரம் நேர்மையாக கையாள வேண்டும் என்பதனை இலக்காக கொண்டு புதிய கட்சியில் எமது தூய்மையான, நேர்மையான பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

கட்சி மாறி மாறிப் பயணித்தாலும், எமது இலக்குகளும், எண்ணங்களும் மாறவில்லை. புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நீண்ட காலமாக ஒவ்வொரு கட்சிகளும், ஒவ்வொரு கோணங்களில் பயணித்தனர். மாத்திரமின்றி, புத்தளத்திலுள்ள சிறுபான்மை அரசியல் தலைவர்களை பலவீனப்படுத்தி அவர்களின் கைக்கூலிகளாக வழிநடத்தினார்கள். 

இதனால் நாங்கள் அரசியல் செயற்பாடுகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

எனவேதான் புத்தளம் மக்களின் குரலாக இந்தக் கட்சியில் ஒரு பலமான அணியை களமிறக்கியுள்ளோம். 

இந்தப் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி ஊடாக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்கின்ற வகையில் மிகவும் திறமையான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். 

நிச்சயமாக ஆட்சியை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக எமது கட்சி கூடுதலான ஆசனங்களை பெறும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் கிடையாது.

ஆளுமை மிக்க, தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய நேர்மையானவர்களை புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்கள் இனங்காண வேண்டும். நீண்ட காலமாக சிறுபான்மைக் கட்சிகள் எமது மாவட்டத்திற்கு ஆசனங்களை வழங்குவதாகவும், அபிவிருத்தியில் அழகுபடுத்துவதாகவும், அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பதவிகளுடன் அலங்கரித்தவர்கள் புத்தளம் மக்களினதும், புத்தளத்தில் நிரந்தரமாக வாழும் வடக்கு முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களையும், அபிலாஷைகளையும் முழுமையாக புறக்கணித்து செயற்பட்டதை புத்தளம் மக்கள் மறக்க மாட்டார்கள்.

இன்று இந்த புதிய பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கும் தருணத்தில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எமது மக்களின் வாக்குகளை சின்னாபின்னமாக்கி, புத்தளம் மக்களை தொடர்ந்தும், அநாதைகளாகவும், அடிமைகளாகவும் ஆக்குவதற்கு திட்டங்களை வகுத்து, அவர்களின் தேவைக்கு ஏற்ப கட்சி அரசியலை செய்து வருகின்றனர்.

இந்த நாடு பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழல் அற்ற தூய்மையான ஆட்சியை ஏற்படுத்தவும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் புதியதொரு ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள். இந்த நாடு எப்படி பிரகாசிக்க வேண்டுமோ அதுபோல புத்தளம் மாவட்டமும் பிரகாசிக்க வேண்டும்.

புத்தளம் மக்கள் மிகவும் கௌரவமாக, தனித்துவமாக பயணிக்க வேண்டியிருக்கிறது. நீண்ட காலமாக நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். புத்தளத்தில் தலைமைத்தும் யார் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு எமது தலைமைத்துவங்கள் திட்டமிட்டு இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. 

ஓவ்வொரு கட்சிகளும் தமக்குத் தேவையான மாதிரி வடிவமைத்து மகிவும் கேவலமான அரசியல் கலாசாரத்தை புத்தளத்தில் இதுவரை காலமும் முன்னெடுத்திருந்தன.

இந்த படுமோசமான அரசியல் கலாசாரத்திற்கு முடிவுகட்டி, புத்தளத்தில் திறமையான, ஆளுமைமிக்க தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போது மக்களுக்கான மிகப் பெரும் பொறுப்பாக இருக்கிறது. 

எல்லா இனங்களையும் அரவணைத்துக்கொண்டு புத்தளத்தில் புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கு வடிவம் கொடுப்பதற்கு ஐக்கிய ஜனநயாக குரல் அணி ஒரு பலமான அணியாக புத்தளத்தில் களமிறங்கியுள்ளோம்.

ஏங்களுக்கு எதிராக எந்த ஊழல் குற்றச் சாட்டுக்களும் இல்லை. எந்த இடத்திலும், காணிகளும் பிடிக்கவில்லை. ஊழல் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கவில்லை. ஆனால், அரசியலுக்காக , மக்களின் பொதுத் தேவைகளுக்காக எமது சொந்த பணத்தை செலவழித்திருக்கிறோம். எமது சொத்துக்களை அழித்திருக்கிறோம் என்பது வரலாறு தெரிந்த உண்மையாகும்.

நாட்டில் மாத்திரமல்ல பிரதேசத்திலும் ஊழல் செய்தவர்கள் தொடர்ந்தும் அரசியல் ஆசை, அபிலாஷைகளுடன் வந்து புத்தளத்தின் அரசியலை திசை திருப்புவதற்காக பொட்டனி வியாபாரிகளைப் போல இங்கு வந்து கூடாரம் அமைத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்திற்குள்ளேயும், வெளியேயும் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பிய ரஞ்சன் ராமநாயக்கவை தலைமையாக கொண்டு திறமையான, ஆளுமைமிக்க பலமான அணி இந்தக் கட்சி பயணிக்கிறது. 

இந்தக் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து எமது மைக் சின்னத்திற்கு ஒரு புள்ளடி மாத்திரம் இடுங்கள். முழப் புத்தளம் மக்களின் அத்தனை அபிலாஷைகளையும் நாங்கள் நிறைவேற்றிக் கொடுப்போம்.

கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து மர்ஹ_ம் பாயிசுடன் இணைந்து புத்தளத்தில் நான் பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். தேர்தல் காலங்களில் பெரும்பான்மை, சிறுபான்மை கட்சிகள் புத்தளம் மக்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு கட்சி அரசியலை செய்தார்களே தவிர, அபிவிருத்திகளை செய்யவில்லை.

இன்று அரசியல் ரீதியாகவும், அபிவிருத்தி ரீதியாகவும் எங்களை பலகீனப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் காண்டு இந்த தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.

எனவே, தகுதியான தலைமைத்துவத்தை தெரிவுசெய்ய மக்கள் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியோடு அணிதிரள வேண்டும் என்றார்.

ஆளுமை உள்ளவர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் - எஹியா வேண்டுகோள். மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய திறமையானவர்களை புத்தளம் மக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த, வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஆப்தீன் எஹியா, வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக கட்சி ஊடாக புத்தளம் மாவட்டத்தில் பிரித்தாலும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனவும் தெரிவித்தார்.பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் முதலாவது ஊடக ஊடக சந்திப்பு நேற்று (13) மாலை மதுரங்குளி - கடையாமோட்டையில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் உப தலைவர் ஸப்வான் சல்மான் , கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.என்.எம்.ரினோஸ் உட்பட கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான பி.ஏ. நிமல் பமுனு ஆராச்சி (புத்தளம் பிரதேச சபை முன்னாள் தலைவர்), எம்.கே.எம்.ஆதிர் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்), ஏ.ஆர்.எம்.ஜெஸீல் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்), எச்.சம்சீர், ஏ.டபிள்யூ.எஸ். அர்ஷத், என்.எம்.எம்.முயீன் ஜே.பி, எச்.எச்.எம்.நளீம், எஸ்.எம்.ரம்சான், எம்.எப்.எம். சப்ராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஆப்தீன் எஹியா மேலும் தெரிவிக்கையில்,புத்தளம் மாவட்ட மக்களின் அரசியல் அதிகாரம் நேர்மையாக கையாள வேண்டும் என்பதனை இலக்காக கொண்டு புதிய கட்சியில் எமது தூய்மையான, நேர்மையான பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.கட்சி மாறி மாறிப் பயணித்தாலும், எமது இலக்குகளும், எண்ணங்களும் மாறவில்லை. புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நீண்ட காலமாக ஒவ்வொரு கட்சிகளும், ஒவ்வொரு கோணங்களில் பயணித்தனர். மாத்திரமின்றி, புத்தளத்திலுள்ள சிறுபான்மை அரசியல் தலைவர்களை பலவீனப்படுத்தி அவர்களின் கைக்கூலிகளாக வழிநடத்தினார்கள். இதனால் நாங்கள் அரசியல் செயற்பாடுகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம்.எனவேதான் புத்தளம் மக்களின் குரலாக இந்தக் கட்சியில் ஒரு பலமான அணியை களமிறக்கியுள்ளோம். இந்தப் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி ஊடாக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்கின்ற வகையில் மிகவும் திறமையான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். நிச்சயமாக ஆட்சியை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக எமது கட்சி கூடுதலான ஆசனங்களை பெறும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் கிடையாது.ஆளுமை மிக்க, தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய நேர்மையானவர்களை புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்கள் இனங்காண வேண்டும். நீண்ட காலமாக சிறுபான்மைக் கட்சிகள் எமது மாவட்டத்திற்கு ஆசனங்களை வழங்குவதாகவும், அபிவிருத்தியில் அழகுபடுத்துவதாகவும், அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பதவிகளுடன் அலங்கரித்தவர்கள் புத்தளம் மக்களினதும், புத்தளத்தில் நிரந்தரமாக வாழும் வடக்கு முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களையும், அபிலாஷைகளையும் முழுமையாக புறக்கணித்து செயற்பட்டதை புத்தளம் மக்கள் மறக்க மாட்டார்கள்.இன்று இந்த புதிய பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கும் தருணத்தில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எமது மக்களின் வாக்குகளை சின்னாபின்னமாக்கி, புத்தளம் மக்களை தொடர்ந்தும், அநாதைகளாகவும், அடிமைகளாகவும் ஆக்குவதற்கு திட்டங்களை வகுத்து, அவர்களின் தேவைக்கு ஏற்ப கட்சி அரசியலை செய்து வருகின்றனர்.இந்த நாடு பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழல் அற்ற தூய்மையான ஆட்சியை ஏற்படுத்தவும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் புதியதொரு ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள். இந்த நாடு எப்படி பிரகாசிக்க வேண்டுமோ அதுபோல புத்தளம் மாவட்டமும் பிரகாசிக்க வேண்டும்.புத்தளம் மக்கள் மிகவும் கௌரவமாக, தனித்துவமாக பயணிக்க வேண்டியிருக்கிறது. நீண்ட காலமாக நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். புத்தளத்தில் தலைமைத்தும் யார் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு எமது தலைமைத்துவங்கள் திட்டமிட்டு இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. ஓவ்வொரு கட்சிகளும் தமக்குத் தேவையான மாதிரி வடிவமைத்து மகிவும் கேவலமான அரசியல் கலாசாரத்தை புத்தளத்தில் இதுவரை காலமும் முன்னெடுத்திருந்தன.இந்த படுமோசமான அரசியல் கலாசாரத்திற்கு முடிவுகட்டி, புத்தளத்தில் திறமையான, ஆளுமைமிக்க தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போது மக்களுக்கான மிகப் பெரும் பொறுப்பாக இருக்கிறது. எல்லா இனங்களையும் அரவணைத்துக்கொண்டு புத்தளத்தில் புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கு வடிவம் கொடுப்பதற்கு ஐக்கிய ஜனநயாக குரல் அணி ஒரு பலமான அணியாக புத்தளத்தில் களமிறங்கியுள்ளோம்.ஏங்களுக்கு எதிராக எந்த ஊழல் குற்றச் சாட்டுக்களும் இல்லை. எந்த இடத்திலும், காணிகளும் பிடிக்கவில்லை. ஊழல் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கவில்லை. ஆனால், அரசியலுக்காக , மக்களின் பொதுத் தேவைகளுக்காக எமது சொந்த பணத்தை செலவழித்திருக்கிறோம். எமது சொத்துக்களை அழித்திருக்கிறோம் என்பது வரலாறு தெரிந்த உண்மையாகும்.நாட்டில் மாத்திரமல்ல பிரதேசத்திலும் ஊழல் செய்தவர்கள் தொடர்ந்தும் அரசியல் ஆசை, அபிலாஷைகளுடன் வந்து புத்தளத்தின் அரசியலை திசை திருப்புவதற்காக பொட்டனி வியாபாரிகளைப் போல இங்கு வந்து கூடாரம் அமைத்திருக்கிறார்கள்.பாராளுமன்றத்திற்குள்ளேயும், வெளியேயும் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பிய ரஞ்சன் ராமநாயக்கவை தலைமையாக கொண்டு திறமையான, ஆளுமைமிக்க பலமான அணி இந்தக் கட்சி பயணிக்கிறது. இந்தக் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து எமது மைக் சின்னத்திற்கு ஒரு புள்ளடி மாத்திரம் இடுங்கள். முழப் புத்தளம் மக்களின் அத்தனை அபிலாஷைகளையும் நாங்கள் நிறைவேற்றிக் கொடுப்போம்.கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து மர்ஹ_ம் பாயிசுடன் இணைந்து புத்தளத்தில் நான் பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். தேர்தல் காலங்களில் பெரும்பான்மை, சிறுபான்மை கட்சிகள் புத்தளம் மக்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு கட்சி அரசியலை செய்தார்களே தவிர, அபிவிருத்திகளை செய்யவில்லை.இன்று அரசியல் ரீதியாகவும், அபிவிருத்தி ரீதியாகவும் எங்களை பலகீனப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் காண்டு இந்த தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.எனவே, தகுதியான தலைமைத்துவத்தை தெரிவுசெய்ய மக்கள் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியோடு அணிதிரள வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement