• Oct 09 2024

மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தீர்வு- குகதாசன் எம்.பி உறுதி..!

Sharmi / Sep 7th 2024, 9:24 pm
image

Advertisement

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூதூர் புளியடிச்சோலை கங்குவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சங்காபிசேகத்தில்  இன்றையதினம்(07) கலந்துகொண்ட  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலும் எதிர்காலத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்..

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக் கிராமத்துக்கு உதவிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ள போதும், தற்போது தேர்தல் காலம் என்ற படியால் தேர்தலின் பின் உதவிகள் வழங்கப்படும் என  ச.குகதாசன் இதன்போது தெரிவித்தார்.

தங்கள் கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்க்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பேன்.

வரவு செலவு திட்டத்தின் பின்னரான காலப் பகுதியில் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் குகதாசன் தெரிவித்தார்.


மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தீர்வு- குகதாசன் எம்.பி உறுதி. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மூதூர் புளியடிச்சோலை கங்குவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சங்காபிசேகத்தில்  இன்றையதினம்(07) கலந்துகொண்ட  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.குறித்த பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலும் எதிர்காலத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.இதில் இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இக் கிராமத்துக்கு உதவிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ள போதும், தற்போது தேர்தல் காலம் என்ற படியால் தேர்தலின் பின் உதவிகள் வழங்கப்படும் என  ச.குகதாசன் இதன்போது தெரிவித்தார்.தங்கள் கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்க்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பேன்.வரவு செலவு திட்டத்தின் பின்னரான காலப் பகுதியில் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் குகதாசன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement