• Oct 02 2026

வேட்டைத்துப்பாக்கி வெடித்து நபர் உயிரிழப்பு

Chithra / Oct 2nd 2026, 12:08 pm
image


நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தப்போவ பகுதியில் வேட்டைத்துப்பாக்கி ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று (01) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தப்போவ பகுதியில் இடம்பெற்ற வேட்டைத்துப்பாக்கி வெடிப்பில் படுகாயமடைந்த குறித்த நபர், நவகத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விலங்குகளை வேட்டையாடுவதற்காக குறித்த நபரால் வைத்திருந்த வேட்டைத்துப்பாக்கியே வெடித்ததில் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

வேட்டைத்துப்பாக்கி வெடித்து நபர் உயிரிழப்பு நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தப்போவ பகுதியில் வேட்டைத்துப்பாக்கி ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (01) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தப்போவ பகுதியில் இடம்பெற்ற வேட்டைத்துப்பாக்கி வெடிப்பில் படுகாயமடைந்த குறித்த நபர், நவகத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விலங்குகளை வேட்டையாடுவதற்காக குறித்த நபரால் வைத்திருந்த வேட்டைத்துப்பாக்கியே வெடித்ததில் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement