• Nov 22 2024

யாழிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை இன்று ஆரம்பம்...! நூற்றுக்கணக்கான யாத்திரீகர்கள் பங்கேற்பு...!

Sharmi / May 11th 2024, 10:56 am
image

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழா கொடியேற்றத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தவத்திரு. நா.க.சி.கணபதி கதிர்வேலு  திருநீற்று சித்தர் தலைமையில் இன்றையதினம் காலை தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று சந்நிதியான் ஆலய பூசகரினால் முருகப்பெருமானுடைய வேல் யாத்திரீகர் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

நூற்றுக்கணக்கான யாத்திரீகர்களுடன் முருக நாமம் எங்கும் ஒலிக்க கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பமாகியது.

இப் பாதயாத்திரையானது சந்நிதி-கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 23ஆவது வருடமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை உள்ளிட்ட 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




யாழிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை இன்று ஆரம்பம். நூற்றுக்கணக்கான யாத்திரீகர்கள் பங்கேற்பு. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழா கொடியேற்றத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தவத்திரு. நா.க.சி.கணபதி கதிர்வேலு  திருநீற்று சித்தர் தலைமையில் இன்றையதினம் காலை தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று சந்நிதியான் ஆலய பூசகரினால் முருகப்பெருமானுடைய வேல் யாத்திரீகர் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான யாத்திரீகர்களுடன் முருக நாமம் எங்கும் ஒலிக்க கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பமாகியது.இப் பாதயாத்திரையானது சந்நிதி-கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 23ஆவது வருடமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை உள்ளிட்ட 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement