• Apr 15 2026

புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் வீழ்ந்த விமானம் - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

shanu / Feb 11th 2026, 4:05 pm
image

சோமாலியா மொகடிஷுவின் ஏடன் அடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே கடற்கரையோர நீரில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 


ஸ்டார்ஸ்கி ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்படும் ஸ்டார்ஸ்கை ஃபோக்கர் 50 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 


விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 55 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவசரமாக தரையிறங்க முற்பட்டது. 


இதன்போதே  ​​அருகிலுள்ள கடற்கரையில் ஆழமற்ற நீரில் மூழ்கி விபத்திற்குள்ளானது. விபத்தில் பயணிகள்  யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.  விமானத்தில் இருந்த 50 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் கரையில் நிற்கும் முன், "விமானம் ஓடுபாதையில் கவிழ்ந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.  


மீட்புக் குழு விமானத்தில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும்  விமானம் மட்டுமே சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் வீழ்ந்த விமானம் - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள் சோமாலியா மொகடிஷுவின் ஏடன் அடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே கடற்கரையோர நீரில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. ஸ்டார்ஸ்கி ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்படும் ஸ்டார்ஸ்கை ஃபோக்கர் 50 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 55 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவசரமாக தரையிறங்க முற்பட்டது. இதன்போதே  ​​அருகிலுள்ள கடற்கரையில் ஆழமற்ற நீரில் மூழ்கி விபத்திற்குள்ளானது. விபத்தில் பயணிகள்  யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.  விமானத்தில் இருந்த 50 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  அறிக்கையில் தெரிவித்துள்ளார். விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் கரையில் நிற்கும் முன், "விமானம் ஓடுபாதையில் கவிழ்ந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.  மீட்புக் குழு விமானத்தில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும்  விமானம் மட்டுமே சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement