• Feb 07 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் வேண்டும்.- ஜீவன்தொண்டமான் பகிரங்கம்

Thansita / Feb 7th 2025, 3:00 pm
image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அனுதாபம் தேவையில்லை அங்கீகாரம் வேண்டும். என இன்றைய பாராளுமன்ற அமர்விலே ஜீவன்தொண்டமான்  தெரிவித்துள்ளார். 

மேலும் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டது. நிதியை வைத்துக்கொண்டு றோட் போடமாட்டோம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. எங்களைப் பொறுத்த வரையில்  மத்திய அரசாங்கத்திலிருந்து யார் அமைச்சராக வந்தாலும் நிதி ஒதுக்கீடு சரியான குறைவு அதுதான் யதார்த்தம். தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறுமனே 10 சதவீதம்.  தோட்டத் தொழிலாளர்களுக்கு அனுதாபம் தேவையில்லை அங்கீகாரம் வேண்டும்.

நான் நல்லது செய்ய நினைக்கும் போது என்னுடைய பின்னனியை ஆராய்கிறார்கள். நான் இவ்வளவு காலமாக இருந்ததினாலே தான் இந்த நாட்டிலே இவ்வளவு தோட்ட மக்கள் வாழ்கின்றார்கள். 4 மாதத்தில் எப்படி வீடு கட்டிக்கொடுக்க முடியும்? இந்த அமைச்சப் பொறுத்த வரைக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிச்சே ஆக வேண்டும். நான் அமைச்சராக இருந்த  காலத்தில இதுவரைக்கும் வீதிகள் வராத இடத்தில வீதிகளை கட்டியிருக்கிறோம் 

தோட்ட பகுதிகளில் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குவதற்கு ஆளுந்தரப்புக்கு ஆதரவு வழங்குவேன். மலையகத்தில் வீதிகளை அமைக்க  பெருந்தோட்ட நிறுவனம் தடையேற்படுத்துகின்றது. 

இப்பொழுது இருக்கின்ற நிலமையிலே தொண்டமான் என்கின்ற நாமத்தை எவ்வளவு விமர்சித்தாலும் மலையக மக்களைப் பொறுத்த வரையில் அவங்களுக்கு கிடைக்கிறது மாடி வீடா தனி வீடா? காணி உரிமையா? இல்லாட்டி அவர்களை வெளியேற்றப் போகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தோட்டத் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் வேண்டும்.- ஜீவன்தொண்டமான் பகிரங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு அனுதாபம் தேவையில்லை அங்கீகாரம் வேண்டும். என இன்றைய பாராளுமன்ற அமர்விலே ஜீவன்தொண்டமான்  தெரிவித்துள்ளார். மேலும் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டது. நிதியை வைத்துக்கொண்டு றோட் போடமாட்டோம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. எங்களைப் பொறுத்த வரையில்  மத்திய அரசாங்கத்திலிருந்து யார் அமைச்சராக வந்தாலும் நிதி ஒதுக்கீடு சரியான குறைவு அதுதான் யதார்த்தம். தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறுமனே 10 சதவீதம்.  தோட்டத் தொழிலாளர்களுக்கு அனுதாபம் தேவையில்லை அங்கீகாரம் வேண்டும்.நான் நல்லது செய்ய நினைக்கும் போது என்னுடைய பின்னனியை ஆராய்கிறார்கள். நான் இவ்வளவு காலமாக இருந்ததினாலே தான் இந்த நாட்டிலே இவ்வளவு தோட்ட மக்கள் வாழ்கின்றார்கள். 4 மாதத்தில் எப்படி வீடு கட்டிக்கொடுக்க முடியும் இந்த அமைச்சப் பொறுத்த வரைக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிச்சே ஆக வேண்டும். நான் அமைச்சராக இருந்த  காலத்தில இதுவரைக்கும் வீதிகள் வராத இடத்தில வீதிகளை கட்டியிருக்கிறோம் தோட்ட பகுதிகளில் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குவதற்கு ஆளுந்தரப்புக்கு ஆதரவு வழங்குவேன். மலையகத்தில் வீதிகளை அமைக்க  பெருந்தோட்ட நிறுவனம் தடையேற்படுத்துகின்றது. இப்பொழுது இருக்கின்ற நிலமையிலே தொண்டமான் என்கின்ற நாமத்தை எவ்வளவு விமர்சித்தாலும் மலையக மக்களைப் பொறுத்த வரையில் அவங்களுக்கு கிடைக்கிறது மாடி வீடா தனி வீடா காணி உரிமையா இல்லாட்டி அவர்களை வெளியேற்றப் போகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement