• Dec 14 2024

இந்திய நடிகரை கொலை செய்ய சதி! - இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற கும்பல் சிக்கியது

Chithra / Jun 1st 2024, 6:47 pm
image


இந்திய நடிகரான சல்மான் கானை கொலை செய்யத் திட்டமிட்ட சதி தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சல்மான் கான் பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றபோது, அவர் மீது மற்றொரு கொலை முயற்சி திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யும் நோக்கில் சதித் திட்டம் தீட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்பிச் செல்வதற்கு நான்கு பேர் அடங்கிய கும்பல் ஒன்று செயற்பட்டதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பலிடம் அதி சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

பாந்த்ரா துப்பாக்கிச் சூட்டில் ஏற்கனவே சந்தேகிக்கப்படும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் இந்த சதிக்கு பின்னால் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

குறித்த நான்கு பேரிடமும் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய நடிகரை கொலை செய்ய சதி - இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற கும்பல் சிக்கியது இந்திய நடிகரான சல்மான் கானை கொலை செய்யத் திட்டமிட்ட சதி தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.நடிகர் சல்மான் கான் பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றபோது, அவர் மீது மற்றொரு கொலை முயற்சி திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யும் நோக்கில் சதித் திட்டம் தீட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்பிச் செல்வதற்கு நான்கு பேர் அடங்கிய கும்பல் ஒன்று செயற்பட்டதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த கும்பலிடம் அதி சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.பாந்த்ரா துப்பாக்கிச் சூட்டில் ஏற்கனவே சந்தேகிக்கப்படும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் இந்த சதிக்கு பின்னால் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.குறித்த நான்கு பேரிடமும் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement