• Sep 17 2024

நாட்டில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Jun 1st 2024, 6:20 pm
image

Advertisement

அடுத்த 36 மணி நேரத்திற்கு நாட்டில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

இன்று (01) மாலை  வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அது சுட்டிக்காட்டியுள்ளது.

ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தென் மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

இதேவேளை  தொடர் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன இடைத்தங்கல் பகுதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால், சிறிய வாகனங்கள் அதிவேக வீதிக்குள் பிரவேசிக்க முடியாது, 

லொறிகள் மாத்திரமே நீரில் பயணிக்க முடியும் எனவும், காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களும் வெலிப்பென்ன பகுதியில் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன இடைத்தங்கல் பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை அடுத்த 36 மணி நேரத்திற்கு நாட்டில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று (01) மாலை  வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அது சுட்டிக்காட்டியுள்ளது.ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.தென் மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.இதேவேளை  தொடர் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன இடைத்தங்கல் பகுதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இதனால், சிறிய வாகனங்கள் அதிவேக வீதிக்குள் பிரவேசிக்க முடியாது, லொறிகள் மாத்திரமே நீரில் பயணிக்க முடியும் எனவும், காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களும் வெலிப்பென்ன பகுதியில் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இதன்காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன இடைத்தங்கல் பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement