• Dec 25 2024

சீன மருத்துவக் கப்பலை பார்வையிட்டார் பிரதம‌ர் ஹரிணி!

Chithra / Dec 25th 2024, 9:15 am
image


சீன மருத்துவக் கப்பலான ‘பீஸ் ஆர்க்’ இலங்கைக்கு சம்பிரதாயபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.  இந்நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த கப்பலை பார்வையிட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் அதேவேளை, இலங்கையர்களுக்கு மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று குறித்த கப்பலுக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த கப்பலின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

முற்றுமுழுதாக மருத்துவ சேவையை மாத்திரம் உள்ளடக்கியிருக்கும் இந்த கப்பல், கடந்த 22 ஆம் திகதி முதல் இலங்கை மக்களுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் நடத்திவருகிறது. 

இச்சேவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.

178 மீ நீளமுள்ள ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பலில் கேப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவிருக்கிறது.


சீன மருத்துவக் கப்பலை பார்வையிட்டார் பிரதம‌ர் ஹரிணி சீன மருத்துவக் கப்பலான ‘பீஸ் ஆர்க்’ இலங்கைக்கு சம்பிரதாயபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.  இந்நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த கப்பலை பார்வையிட்டுள்ளார்.கடந்த 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் அதேவேளை, இலங்கையர்களுக்கு மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறது.இந்நிலையில் இன்று குறித்த கப்பலுக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த கப்பலின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.முற்றுமுழுதாக மருத்துவ சேவையை மாத்திரம் உள்ளடக்கியிருக்கும் இந்த கப்பல், கடந்த 22 ஆம் திகதி முதல் இலங்கை மக்களுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் நடத்திவருகிறது. இச்சேவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.178 மீ நீளமுள்ள ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பலில் கேப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவிருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement