• May 20 2024

மக்களின் பேராதரவுடன் தேர்தல்களில் பொதுஜன பெரமுன வெற்றிவாகை சூடும்...! மொட்டு எம்.பி சூளுரை...!

Sharmi / May 10th 2024, 11:33 am
image

Advertisement

முதலில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு  பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான காலப்பகுதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு  நேற்றையதினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு தொடர்பில்  ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ என எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளது.

தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கிராம மட்டத்தில் இருந்து நாம் ஆரம்பித்துள்ளோம்.

எதிர்வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெறும். மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரையே நாம் வேட்பாளராக அறிவிப்போம். நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சியும் எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கினாலும் பொதுஜன பெரமுன மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.



மக்களின் பேராதரவுடன் தேர்தல்களில் பொதுஜன பெரமுன வெற்றிவாகை சூடும். மொட்டு எம்.பி சூளுரை. முதலில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு  பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான காலப்பகுதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு  நேற்றையதினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.குறித்த அறிவிப்பு தொடர்பில்  ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ என எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கிராம மட்டத்தில் இருந்து நாம் ஆரம்பித்துள்ளோம்.எதிர்வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெறும். மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரையே நாம் வேட்பாளராக அறிவிப்போம். நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சியும் எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கினாலும் பொதுஜன பெரமுன மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement