அஹுங்கல்ல – கல்வெஹெர பகுதியில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்த 74 வயதுடைய நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
வீட்டின் ஜன்னல் வழியாக துப்பாக்கியை நீட்டி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வீட்டு ஜன்னல் வழியாக துப்பாக்கியை நீட்டி சூடு மர்ம நபர்களால் அதிகாலை பரபரப்பு அஹுங்கல்ல – கல்வெஹெர பகுதியில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வீட்டில் இருந்த 74 வயதுடைய நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.வீட்டின் ஜன்னல் வழியாக துப்பாக்கியை நீட்டி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.எனினும், துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.